India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மோரனப்பள்ளி அருகே பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் கோவிலில் மிளகாய் வத்தல் யாகம் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோவிலுக்கு நேற்று சினிமா நடிகர் யோகி பாபு வந்து அம்மனை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே ஊரக வளர்ச்சிதுறை அலுவலா்கள் சங்கத்தினா் சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 69 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,094 ரேஷன் கடைகள் மூலம் 5.67 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு நாளை(ஜன 9) முதல் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ஆகியவை நாளை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை அந்தந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது என கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான கோகோ விளையாட்டு போட்டி நாமக்கல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரி சார்ந்த மாணவர்கள் நான்காம் இடத்தை பெற்றனர். கல்லூரி முதல்வர் சு தனபால் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து, விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில், நாகரசம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா.நேசிகா முதல் பரிசு பெற்றார். மாணவிக்கு முதலமைச்சர் பரிசு வழங்கியதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், மாநில ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பேசும்போது, அவரிடமிருந்து மைக்கை வாங்கியதால், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அது பெரும் கோஷ்டி மோதலாக மாற, அங்கிருந்த போலீசார் இருவரையும் சமரசம் செய்து, அனுப்பி வைத்தனர்.
ஓசூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்னலாடை, தையல் இயந்திரம் இயக்குபவர் தொழில்பிரிவு 46-ஆவது அணிக்கான நேரடி சேர்க்கை ஜன.20ஆம் தேதி முதல் பிப்.7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்ப கட்டணம் ரூ.50, சோ்க்கை கட்டணம் ரூ.100 ஆகும். மேலும் விவரங்களுக்கு 04344-262457 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சரயு பெற்றுக்கொண்டார். உடனடியாக தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா் அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி, அத்திமுகம் அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி உள்ளிட்ட 7 கல்லூரிகளில் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மூலம் உதவி மருத்துவர் (பொது) பணிக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 636 போ் எழுதினா். அத்திமுகம் தோ்வு கூடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, எஸ் பி தங்கதுரை நேரில் பார்வையிட்டனர்.
போச்சம்பள்ளி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆண்டிற்கான நேரடி சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாதம்தோறும் ரூ.750/- கல்வி உதவித்தொகையுடன் பயிற்சி கட்டணம் இலவசம். விண்ணப்ப கட்டணம் ரூ 50, சேர்க்கை கட்டணம் ரூ. 195 செலுத்தி ஜன 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 944308145, 9789681995,9787970227 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேர் பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.