Krishnagiri

News January 23, 2025

சாதனை படைத்த மாணவனை வாழ்த்திய தாளாளர்

image

காடினாயணப்பள்ளியில் இயங்கிவரும் கிருஷ்ணா கல்வியியல் கல்லூரி மாணவன் சந்தோஷ், மலேசியாவில் நடைபெற்ற 5 நாடுகளுக்கு இடையேயான பேச்சுப் போட்டியில் இந்திய தேசிய அளவில் முதலிடம் பிடித்ததையொட்டி, கல்லூரி தாளாளர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள் மாணவனுக்கு வாழ்த்து கூறி ஆசி வழங்கினார். உடன் கல்லூரி தலைவர், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர்.

News January 23, 2025

சாமல்பட்டியில் விபத்துக்குள்ளான காரில் குட்கா சிக்கியது

image

சாமல்பட்டி கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் குஜராத் மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் முன்பகுதி சேதமடைந்த நிலையில் சாலையோரம் நின்று இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரில் சோதனை செய்தனர். அதில் பைகளில் 4 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

News January 22, 2025

பெங்களூருவில் தமிழக பெண்ணுக்கு நடந்த அவலம்

image

பெங்களூருவில் பேருந்துக்காக காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி இரவு கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 22, 2025

கிருஷ்ணகிரியில் ஜன.24ல் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜன.24ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 21, 2025

கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜனவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் ஜனவரி 24 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News January 21, 2025

சிப்காட் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

image

ஒசூா் சிப்காட் சூசூவாடியை சோ்ந்த புருஷோத்தமன் (53), இவா் ஒசூா் சிப்காட் டி.டி.சி. சாலை பகுதியில் கடந்த 19ம் தேதி காலை நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று புருஷோத்தமன் உயிரிழந்தாா்.இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News January 21, 2025

அசாம் மாநில கூலி தொழிலாளி தற்கொலை

image

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்ஜித்பால் (24). இவர் ஓசூர் தாலுகா தேவீரப்பள்ளி பக்கமுள்ள ஒட்டப்பள்ளியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அமர்ஜித்பால் நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News January 21, 2025

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் டேம் ரோடு பகுதியில் நேற்று ஜனவரி 20ஆம் அதிகாலை, பெங்களூரிலிருந்து சேலம் நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பேருந்து கால்வாயில் சாயாமல் நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணத்தை 60 பயணிகளும், காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.

News January 20, 2025

கிருஷ்ணகிரி மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News January 20, 2025

பாலக்கோடு அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி

image

பாலக்கோடு அருகே கும்மனூர் அடுத்த நாகனூரை சேர்ந்தவர் சேட்டு (38). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்தார் சென்றபோது எதிரே வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

error: Content is protected !!