India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, பள்ளிக்கல்வித்துறையால் 2024-2025-ம் ஆண்டு மாநில அளவில் குடியரசு தின /பாரதியார் தின தேக்வாண்டோ மற்றும் குத்துசண்டை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்று தங்கம், வெள்ளி மற்றும் வெங்கல பதக்கங்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் நேற்று (15) பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஒசூரில் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் சிப்காட் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், வீட்டிற்கு இணைப்பு வழங்க அஞ்செட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் வாரிய பொறியாளர் சிவகுரு மற்றும் வணிக ஆய்வாளர் பிரபாகரன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கோபிநாத் எம்.பி. தலைமை வகித்தார். கலெக்டர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு, அவை பயனாளிகளுக்கு விரைவாகவும் தரமாகவும் சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபிநாத் எம்.பி. தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 15.02.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தென்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
தேவசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாளன்று மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்களில் நம்பிகையாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் உசேன் என்பவர் மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் உசேனை பிடித்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளி பக்கமுள்ள காரண்டப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாஸ் (27). தொழிலாளி. குடும்ப பிரச்சினையால் அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதில் மனமுடைந்த சீனிவாஸ் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வன வாழ்வு மேம்பாடு பங்களிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கூறியதாவது, 3 தனி நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு விருது வழங்கப்படும். விண்ணப்பங்கள் www.tnpcb.gov.in இல் பூர்த்தி செய்யவும், கடைசித் தேதியான ஏப்ரல் 15-ம் தேதியில் முன் சமர்ப்பிக்க வேண்டும்.
கிருஷ்ணகிரியில் இரவு நேரத்தில் குற்றச் செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்கும், மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அந்தவகையில் மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இரவு ரோந்து பணி போலீசாரின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் குந்தாரப்பள்ளியில் கூட்டோடு ஸ்ரீகுமரன் மஹாலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில், தவெக சார்பில் மத்திய மாவட்ட கழக செயலாளர் G.சுரேஷ் வருகை தந்து அறிமுகம் செய்து வைத்தார். இதில், மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.