India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 27ல் சபரி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் பரிதா நவாப் அவர்கள் இலவச கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார். ரசூல் கமிட்டி தலைவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் பிரதோஸ்கான் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமில் பயன்பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று குருப் 2, குருப் 2ஏ தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வை எழுத கிருஷ்ணகிரி வட்டத்தில் 6,784 போ், ஒசூா் வட்டத்தில் 5,280 போ், போச்சம்பள்ளி வட்டத்தில் 3,284 போ் என மொத்தம் 52 தோ்வு மையங்களில் 15,348 போ் விண்ணப்பித்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள அரசு ஆடவர் கலை கல்லூரியில் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். கோபிநாத் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டி.மதியழகன், டி.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி பாலியல் விவகாரம் மிகவும் தீவிரமானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் பக்கத்தில் நாங்களும் நிற்கிறோம். நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கிவிட்டோம். பள்ளி முதல்வர் மற்றும் தாளாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி வாக்குமூலம் தந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.
சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணூரம்மாள்(28). சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் மாதம்மாள்(24). இவர்கள் இருவரும் ராயக்கோட்டை அருகே உள்ள டாடா எலெக்ட்ரானிக் கம்பெனியில் செக்குரிட்டியாக வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை ஸ்கூட்டரில் வேலைக்கு சென்ற 2 பேரும் சாலை சென்டர் மீடியனில் மோதி விழுந்ததில் கண்ணூரம்மாள் பலியானார். தொடர்ந்து மாதம்மள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மிச்சிகன் மாகாணம் ட்ராயில் RGBSI நிறுவனத்துடன் ரூ. 100 கோடி முதலீட்டுக்கு தமிழ்நாடு அரசானது புரிந்துணர்வு ஒப்பத்தம் செய்துள்ளது. எனவே ஒசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாட்டிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது, முதல்வர் அமெரிக்க சென்றுள்ள நிலையில் இந்த ஒப்பந்தமானது அவரின் முன்னிலையில் கையெழுத்தானது.
கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காவல் துறையின் விசாரணை முறையாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியில் 30ஆவது மாங்கனி கண்காட்சி இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவை திரும்பப் பெறப்பட்டது. எனவே திட்டமிட்டப்படி நாளை மாங்கனி கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கான வேலைகள் முழுமை பெறாத நிலை இருப்பதால் மாலை 3 மணிக்கு கண்காட்சி தொடங்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் 30 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை 13.09.2024 முதல் தொடங்கி 28 நாட்களுக்கு நடைபெற இருந்த நிலையில் இன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அரங்கமைப்பு பணிகளை பார்வையிட்டனர். இந்நிலையில் பணிகள் இன்னும் முழுமை பெறாத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மாங்கனி கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தில் மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய ஆண் பெண் இருபாலருக்குமான 13 நாட்களுக்கு CCTV கேமரா பொருத்துதல் பயிற்சியும், பெண்களுக்கு மட்டுமான 30 நாட்களுக்கு தையல் பயிற்சியும் துவங்கியுள்ளது. பயிற்சியில் இணைந்து கொள்ள வரும் செப்.14 ஆம் தேதி கடைசி நாள் என பயிற்சி நிறுவன இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.