Krishnagiri

News March 2, 2025

 கிருஷ்ணகிரியில் நாளை சிறப்பு சான்றிதழ் முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் வட்டார பி ஆர் சி சார்பாக நாளை மார்ச் 3 ஆம் தேதி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக ஓபிசி சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி முகாம் காவேரிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி பர்கூர் அரசு பள்ளி வேலம்பட்டி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது அது சமயம் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 2, 2025

போஸ்ட் ஆபிசில் வேலை; நாளையே கடைசி

image

கிருஷ்ணகிரியில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.87 பணியிடங்கள். கணினி அறிவு, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.12,000 – ரூ.29,380, உதவி போஸ்ட் மாஸ்டருக்கு ரூ.10,000 – ரூ.24,470 வரை சம்பளம். நாளைக்குள் (மார்.3) இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 2, 2025

22,270 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர்

image

கிருஷ்ணகிரியில் பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள் வரும் மார்ச், 3-ல், துவங்கி 25- வரையிலும்,பிளஸ் 1 தேர்வுகள் வரும் மார்ச்,5- முதல், 27 வரையிலும், நடக்கிறது.பிளஸ் 1 தேர்வை, 22,627 மாணவ, மாணவியர், 274 மாற்றுத்திறன் மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 2 வகுப்பு தேர்வை, 21,949 மாணவ, மாணவியர் மற்றும் 231 மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87 மையங்களில் தேர்வு நடக்கிறது.

News March 2, 2025

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

image

2024-25 கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை (மார்ச் 3) தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், மாணவர்கள் தேர்வு தொடர்பான புகார்கள், கருத்துகள், ஐயங்களைத் தெரிவிக்க வசதியாக, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

News March 2, 2025

குமாரபாளையம் அருகே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

image

குமாரபாளையம் அருகே போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயற்சித்தனா். போலீஸாரை கண்டதும் ஓட்டுநா் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டாா். பின்பு அந்த வாகனத்தை தனிப்படை போலீஸாா் சோதனை செய்ததில் அதில் ஜெலட்டின் குச்சிகள் பண்டல்களாக இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News March 2, 2025

வேப்பனப்பள்ளி அருகே மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

image

வி.மாதேப்பள்ளி கிராமத்தில் நேற்று அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. அப்போது எருது விடும் விழாவை காண வந்தத அதேபகுதியை சேர்ந்த இருசன் (65) என்பவரை மாடு முட்டி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது முதியவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 1, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (01.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தென்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

News March 1, 2025

பார்மசி படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400- ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 1, 2025

குறுகிய கால திறன் பயிற்சிக்கு விண்ணப்பம்

image

பிரதம மந்திரி தேசிய இன்டர்ன்ஷிப் பயிற்சி மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு 10,12-ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி (BE/ BA/ BSc/B.com) மற்றும் ஐ.டிஐ கல்வித்தகுதி உடையவர்கள் http://pminternship.mca.gov.in/login/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News March 1, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 28.02.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தென்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!