Krishnagiri

News May 21, 2024

கிருஷ்ணகிரியில் திறன் வளர்க்கும் போட்டிகள்

image

கிருஷ்ணகிரி புத்தக பேரவையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் தனி திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 25ம் தேதி காலை 9 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இதில் பேச்சு, கவிதை, கட்டுரை, வினாடி வினா, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

கிருஷ்ணகிரி: திருக்கல்யாண வைபவம்

image

கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று (மே-20) ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த கோவிலில் மே 28 வரை பிரம்மோற்சவம் நடைபெறும்.

News May 20, 2024

கிருஷ்ணகிரி அருகே திருக்கல்யாண விழா

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள கோபசந்திரம் கிராமத்தில், தட்சிண திருப்பதி வெங்கடரமண சுவாமி கோயிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓசூர், அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

News May 20, 2024

ஓசூர்: பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காமன்தொட்டி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 நபர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணஸ்வாமி தலைமையில் மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தனர். உடன் மாவட்ட துணை தலைவர் முருகன், அமைப்புசாரா பிரிவு மாநில துணை தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 20, 2024

கிருஷ்ணகிரி: கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு

image

ஊத்தங்கரை உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்ற கல்லாவி புதூர் புங்கனை சென்னகேசவன், சிங்காரப்பேட்டை குப்பநத்தம் ஆறுமுகம், மத்தூர் அடுத்த பெருமனூர் பூபாலன், கிருஷ்ணமூர்த்தி, சாமல்பட்டி குன்னத்தூர் மணிமேகலை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

கிருஷ்ணகிரி: மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

image

ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேறியை சேர்ந்தவர் காளியப்பன். அவரது மகள் திருமலா கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் மதிப்பெண் குறைந்ததால் கடந்த 12ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு கொண்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 19, 2024

கிருஷ்ணகிரியில் குறைதீர் கூட்டம்

image

தமிழ்நாடு மின்சார வழங்கல் விதி தொகுப்பு, மின்சார பகிர்மான விதி தொகுப்பு 2004 தமிழ்நாடு மின்சார மின் பகிர்மான ஒழுங்கு முறை விதிகள் மற்றும் மின் நுகர்வோர் குறை தீர் மன்றம் மற்றும் மின்சார குறை தீர்ப்பாளர் ஒழுங்கு முறை விதிகள் அடிப்படையில் மின் நுகர்வோர் வழக்குகள் மன்றத்தின் முன் நேற்று விசாரணை செய்து பொறியாளர் செல்வகுமார் உறுப்பினர்கள் ஜாய், செந்தில்குமார் முன்னிலையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

News May 19, 2024

பர்கூர் அருகே பயங்கர விபத்து

image

பர்கூர் அருகே உள்ள செட்டிப்பள்ளி பகுதியில் நேற்று மதியம் 3 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணின் உடல் 15 அடி தூரம் வரை இழுத்து சென்றதில் பாதி உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்து காணப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து கந்திகுப்பம் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

News May 18, 2024

பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர் முதுநிலை, முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-2025ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

News May 18, 2024

கிருஷ்ணகிரி அருகே வாலிபர் தற்கொலை

image

அஞ்செட்டி மரியாளம் அருகே சி.ராசிபுரத்தை சேர்ந்தவர் கண்ணியப்பன் மகன் அரவிந்த் (19) இவருக்கு இதே பகுதியை ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கன்னியப்பன் தனது மகன் அரவிந்தனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் கடந்த 16ஆம் தேதி அன்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அரவிந்த் நேற்று உயிரிழந்தார்.

error: Content is protected !!