Krishnagiri

News May 30, 2024

சூளகிரி அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

image

சூளகிரி அருகே நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பரிய ஏரியில் ராமசாமி என்பவர் குத்திகை எடுத்து ஏரியில் 50 டன் மீன் குஞ்சுகள் விட்டிருந்தார். இந்த நிலையில் ஏரியில் திடீரென ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. தென்பெண்ணை ஆற்று நீரில் அதிகப்படியான ரசாயன கழிவுகள் கலப்பதே மீன்கள் உயிரிழப்பு காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News May 30, 2024

பயனாளிகள் தேர்வு பணி: துரிதப்படுத்த ஆட்சியர் உத்தரவு

image

கலைஞரின் கனவு இல்ல திட்ட பயனாளிகளை தேர்வுசெய்யும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் கே.எம்.சர்யு வலியுறுத்தினார். மேலும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

News May 30, 2024

சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது

image

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, முதலமைச்சரால் சுதந்திர தின விழாவின்போது விருதுகள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்விருதுக்கு தகுதியான சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக, வருகிற ஜூன் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் கே.எம்.சரயு நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 30, 2024

கிருஷ்ணகிரியில் இன்று மாதிரித் தேர்வு

image

கிருஷ்ணகிரியில் இன்று ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள காமராஜர் அகாடெமி சார்பாக இலவச மாதிரி TNPSC, IV, VAO, தேர்வு நடைபெறுகின்றது. ஜூன் 9ஆம் தேதி தமிழக அரசு சார்பாக நடைபெற இருக்கும் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் இந்த மாதிரி இலவச VAO, தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம். தேர்வில் கலந்துகொள்ள பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஹால் டிக்கெட் அவசியம்.

News May 29, 2024

கிருஷ்ணகிரி அருகே பீர் தட்டுப்பாடு

image

பர்கூர் பகுதிகளில் உள்ள சிகரலபள்ளி, கந்திலி, மத்தூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பர்கூர் பகுதியில் நடந்த தொட்டிலம்மன் பண்டிகை காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதனால் இன்று பீர் கிடைக்கவில்லை என அப்பகுதி குடிமகன்கள் குமுறி வருகின்றனர். 

News May 29, 2024

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் சிறப்பு!

image

கிருஷ்ணகிரி நகரில் காந்தி சாலையில் 1993இல் இருந்து செயல்பட்டு வருகிறது அரசு அருங்காட்சியகம். தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி இந்த அருங்காட்சியகத்தில், நடுகல் (வீரக்கல்), பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல்சிலைகள், மரப் படிமங்கள், கலைப்பொருட்கள், பனையோலைகள், தொல்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மனித உடல் மாதிரிகள் ஆகியன உள்ளன.

News May 29, 2024

கிருஷ்ணகிரி அருகே பிரபல ரவுடி கைது

image

ஓசூர் டவுன் போலீசார் காரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மக்களுக்கு இடையூறு செய்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஓசூர் காரப்பள்ளி செந்தில் நகரைச் சேர்ந்த நாகராஜ் (44) என்பதும், மேலும் ரவுடி பட்டியலில் உள்ள அவர் மீது ஓசூர் டவுன், அட்கோ, மத்திகிரி காவல் நிலையத்தில் 17 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவரை போலீசார் கைதுசெய்தனர்.

News May 29, 2024

கிருஷ்ணகிரியில் 5ஆம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்

image

கிருஷ்ணகிரியில் நடந்துவரும் 5ஆம் கட்ட நீச்சல் பயிற்சியில் 67 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றுவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நீந்த கற்றுக்கொள்வதற்கான முதல்கட்ட பயிற்சியில் 16 பேரும், இரண்டாம் கட்டமாக 61 பேரும், மூன்றாம் கட்டமாக 101 பேரும், நான்காம் கட்டமாக 83 பேரும் நீச்சல் பயிற்சி பெற்றனர். மொத்தமாக 339 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தெரிவித்தார்.

News May 28, 2024

சூளகிரி அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

image

லாரி ஓட்டுநரான பழனிசாமி (50), குஜராத் மாநிலத்தில் இருந்து சேலத்தில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு இயந்திர சாதனங்களை ஏற்றிக் கொண்டு நேற்று சென்றாா். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, திடீரென சாலையின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணியால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

News May 28, 2024

₹15 லட்சம்: கிருஷ்ணகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கான சாகச விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய அரசின் சார்பில், 2023ம் ஆண்டிற்கான ‘டென்சிங் நார்கே தேசிய சாகச’ விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது பெறுபவர்களுக்கு ₹15 லட்சம், வெண்கல சிலை வழங்கப்படும். மே 31-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!