Krishnagiri

News January 20, 2026

ஓசூர்: பெற்றோர் சொன்ன வார்த்தையால் இளைஞர் தற்கொலை

image

ஓசூர் அடுத்த மத்திகிரியில் நஞ்சபுரம் கிராமத்தை சேர்ந்த பகத்சிங் 26 என்பவர் முதலாம் ஆண்டு தொழில்நுட்ப கல்லூரி பயின்று வந்தார். பகத்சிங்க்கு தொடர்ந்து மது பழக்கம் இருந்ததால் அவருடை பெற்றோர் அவரை தீட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பகத்சிங் ஜன-19 இரவு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் ஜன-20 வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 20, 2026

கிருஷ்ணகிரி: உங்கள் ரேஷன் அட்டை ரத்தாக வாய்ப்பு!

image

ரேஷன் அட்டையில் உள்ள உறுப்பினர்கள் e-KYC அப்டேட் செய்யாவிட்டால், அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்படவோ அல்லது ரேஷன் அட்டை முடக்கப்படவோ வாய்ப்புள்ளது. போலி அட்டைகளைத் தவிர்க்க, உண்மையான பயனாளிகளைக் கண்டறிய உங்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று கைரேகை வைத்து அப்டேட் செய்யவேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு உதவி எண் 1800 425 5901-ஐ அழைக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

கிருஷ்ணகிரிக்கு புதிய DSP!

image

கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அதிகாரி முரளி தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக ரவிசந்திரன் இன்று (ஜன-20) பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News January 20, 2026

கிருஷ்ணகிரி: உங்க பைக், காருக்கு FINE இருக்கா?

image

கிருஷ்ணகிரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு கிளிக் செய்து உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

கிருஷ்ணகிரியில் பயங்கர விபத்து!

image

சூளகிரி அடுத்த சாம்பல்பள்ளம் கிராமத்தில் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை (ஜன.19) கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே மோதி விபத்துக்குள்ளானது. இதில் நல்வாய்ப்பாக லாரி டிரைவர் சிறு காயங்களுடன் தப்பினார். மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News January 20, 2026

ஓசூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ஓசூர் நகரில் இன்று (ஜன 20) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 முதல் மாலை 5 வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், காடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, எடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகண்டபள்ளி, பொம்மண்டயள்ளி, முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படும்.

News January 20, 2026

கிருஷ்ணகிரி: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

image

கிருஷ்ணகிரி மக்களே.., உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE IT.

News January 20, 2026

கிருஷ்னகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் ஜனவரி 24 பொது விநியோகத் திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெறுகிறது. மக்களின் குறைகளை கேட்டு, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யும் சிறப்பு குறைதீர்க்கும் இக்கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கோலா உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 20, 2026

கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தலைமையில் நேற்று (ஜன.19) நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபிநயா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 20, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (19.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!