India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். 1) ஆதார் : https://uidai.gov.in/, 2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in, 3) பான் கார்டு : incometax.gov.in 4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in 5) கிருஷ்ணகிரி மாவட்ட அறிவிப்புகளை அறிய: krishnagiri.nic.in மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. பணியிடங்கள்:162 3. வயது – 21 – 35 4. சம்பளம்: ரூ.32,000 5. தகுதி: Any Degree 6. கடைசி தேதி: 03.02.2026 7. விண்ணப்பிக்க: <

தமிழ்நாட்டை சேர்ந்த 1லட்ச மாணவர்கள் &வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <

கிருஷ்ணகிரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை,மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <

போச்சம்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி தேவன். நேற்று (ஜன.24) அதிகாலை நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்த இவர் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 5 ஆடுகளை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் இழுத்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் விரைந்து வந்து இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் தெரு நாய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.

உத்தனப்பள்ளி அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள் (69). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கும் இடையே நேற்று (ஜன.24) நிலப்பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் சரஸ்வதி, லக்ஷ்மணன், மதுகுமார் ஆகியோர் தாக்கியதில் படுகாயயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

போச்சம்பள்ளியை சேர்ந்த மரம் ஏறும் தொழிலாளி வேலாயுதம் (40). இவர் தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்குள்ள கரும்பு அரவை கூடத்தில் தூங்க சென்ற வேலாயுதம் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வந்து பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது. இந்த மர்ம மரணம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் பகுதியில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை (ஜன.26) குடியரசு தினம் கொண்டாடுவதை ஒட்டி, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. ஸ்ரீதரன் தலைமையில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும், ஜூஜூவாடி உள்ளிட்ட மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் போலீசார் வாகனத் தணிக்கையைப் பலப்படுத்திச் சோதனை செய்து வருகின்றனர்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அகிலேஷ் (35). இவர், உத்தனப்பள்ளி அருகே பாத்தக் கோட்டா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை நிறுவனத்தில் இருந்த எந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதை அறியாத மற்றோரு தொழிலாளி எந்திரத்தை இயக்க அகிலேஷ் எந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.