Krishnagiri

News March 24, 2024

கிருஷ்ணகிரி: காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக கே.கோபிநாத் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டுள்ளது.

News March 23, 2024

கிருஷ்ணகிரி அருகே ஆட்சியர் ஆய்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 23.03.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் உள்ளனர்.

News March 23, 2024

கிருஷ்ணகிரியில் விழிப்புணர்வு பிரச்சாரம்

image

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் அரசுப்பள்ளி, லயன்ஸ்கிளப், நேருயுவகேந்திரா அறிவியல் இயக்கம் போன்றவைகள் இணைந்து நெகிழியை தவிர்ப்போம், மஞ்சள் பையை மீண்டும் பயன்படுத்துவோம் என்றும், பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

கிருஷ்ணகிரி அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம்

image

மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கே.பி.முனுசாமி, பாலகிருஷ்ணா ரெட்டி, கே.அசோக்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

News March 23, 2024

முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடத்தை அமைச்சர் ஆய்வு

image

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இந்த வகையில் வரும் 29ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதற்கான பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தேர்வுசெய்ய, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தேவராஜா திடலினை ஆய்வு செய்தார்.

News March 23, 2024

தேர்தல்: நேரடியாக மோதும் பாஜக-காங்கிரஸ்

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக சார்பில் சி.நரசிம்மன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பி செல்லக்குமாரே மீண்டும் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும் பாஜக-காங்கிரஸ் மோதல் கன்ஃபார்ம்! உங்கள் கருத்து என்ன?

News March 23, 2024

கிருஷ்ணகிரியில் உலக நீர் தினம் கடைப்பிடிப்பு

image

ஊத்தங்கரை அடுத்த படப்பள்ளி ஊ.ஒ.ந.நி பள்ளியில் நேற்று (மார்ச் 22) உலக நீர் தினம் பொறுப்பு தலைமை ஆசிரியர் பிரதீபா தலைமையில் கடைப்பிடிக்கப்பட்டது. நீரின் சேமிப்பு, அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர். உலக நீர் தினத்தை முன்னிட்டு ஓவியம், கவிதை, சுலோகன், பேச்சுப் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இறுதியில் நெகிழி பையை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

News March 22, 2024

புதிரை வண்ணார் மக்களின் அடிப்படை கணக்கெடுப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றி கணக்கெடுப்பு ஐபிஎஸ்ஒஎஸ் என்ற நிறுவனத்தின் மூலம் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து புதிரை வண்ணார் இன மக்களும் கணக்கெடுப்பில் தவறாது கலந்துக்கொண்டு தங்களைப் பற்றிய அனைத்து தகவலையும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.

News March 22, 2024

நான்கு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை

image

ஒசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களுக்கு மார்ச் 25-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு 4 தாலுகாக்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் கே.எம்.சரயு அறிவித்தார். மேலும், மார்ச் 25 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்.6 பணி நாள் எனவும் அறிவித்துள்ளார்.

News March 22, 2024

கிருஷ்ணகிரி: நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை

image

மத்திகிரி தின்னூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் சுமித்ரா (25) ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் சுமித்ரா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் பல ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை, இதனால் மனமுடைந்த சுமித்ரா சம்பவம் அன்று தின்னூர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!