India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (பிப்.7) இரவு முதல் இன்று (பிப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

கும்மளாபுரம் அடுத்துள்ள கங்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசப்பா (60) என்பவர் இன்று மாலை மளிகை பொருட்களை வாங்குவதற்காக கும்ளாபுரத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காட்டு யானை தாக்கி அவர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள், சாலை அமைக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தினர். காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் “வணிக சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஐ.ஏ.எஸ். பங்கேற்று, மகளிர் தயாரிப்புகளை பார்வையிட்டு சந்தை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சி மூலம் மகளிர் தொழில் வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் கிடைத்தது.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே <

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூர் ஊராட்சி கே.ஆர்.பி அணை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி அலுவலகத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் பயிற்சிபெற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 18- 45 வயது வரை உள்ள பெண்கள் பிப்.09க்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9080676557 என்ற எண்ணில் தொடர் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் IT

தேன்கனிகோட்டை அடுத்த ஜர்காலட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் 42, விவசாயி, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் நேற்று பிப்-06 கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பர்கூர் அருகே, கடந்த பிப்.5 தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த 2 வயது இரட்டைக் குழந்தைகள், அங்கிருந்த எலி மருந்தை பற்பசை என நினைத்துத் தவறுதலாக உட்கொண்டனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்கள், தற்போது பெங்களூரு இந்திரா காந்தி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.