Krishnagiri

News April 5, 2024

அனல்பறக்கும் பிரச்சாரம் இல்லை: மக்கள் வருத்தம்

image

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளால், கடந்த தேர்தல்களில் சுவர் விளம்பரம், தெருக்களில் தோரணங்கள், ஆட்டோக்களில் ஸ்பீக்கர் வைத்து பிரச்சாரம், வேட்பாளர்களை ஆதரித்து விடிய விடிய தலைவர்கள் பிரச்சாரம் போன்றவைகளால் டீ கடை முதல் ஓட்டல்கள் வரை நல்ல வியாபாரம் போன்றவை இப்போது இல்லாததால் அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர். தேர்தல் திருவிழா இல்லாமையால் மக்கள் உற்சாகமின்றி உள்ளனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

வாகன சோதனை: பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் உடனிருந்தனர்.

News April 4, 2024

வாகன சோதனையை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 54- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்துாரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று 04.04.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார உடனிருந்தனர்.

News April 4, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிப்பட்டியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

News April 4, 2024

செல்பி பாயிண்ட்: மாணவிகளுடன் ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கே.எம். சரயு மற்றும் கூடுதல் ஆட்சியர் / ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கர்க் ஆகியோர் நேற்று வேளாண் கல்லூரி மாணவ, மாணவியருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

image

சூளகிரி கோட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வரவில்லை என்று பெண்கள் காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சூளகிரி போலீசார் அவர்களிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

News April 3, 2024

அடிப்படை வசதிகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 54- வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வேப்பனஹள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, உருது பள்ளிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News April 3, 2024

மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

image

காமன்தொட்டிக்குட்பட்ட மாற்று காட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி முன்னிலையில் தகவல் தொழில் நுட்பபிரிவு பிரசன்னா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.கே. அசோக்குமார், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

error: Content is protected !!