Krishnagiri

News February 16, 2026

கிருஷ்ணகிரியில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கிருஷ்ணகிரி சூளகிரி சிப்காட் வளாகத்தில் ₹4,000 கோடி முதலீடு செய்ய ஏக்வஸ் (Aequs) குழுமம் இன்று ஒப்பந்தம் செய்தது. வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் இத்திட்டம் மூலம் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இது கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

News February 16, 2026

கிருஷ்ணகிரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

News February 16, 2026

கிருஷ்ணகிரி: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

image

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்.

News February 16, 2026

அலகு குத்திய கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ

image

காவேரிப்பட்டினத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் மயான சூறை பெருவிழா இன்று (பிப்.16) நடைபெற்றது. இந்த பூஜையில் அதிகாலை முதலே வெகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காளம்மனுக்கு நேர்த்தி கடனாக அழகு குத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர். விழாவில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ அசோக்குமார் அலகு குத்தி அங்காளம்மனை வழிபட்டார்.

News February 16, 2026

கிருஷ்ணகிரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News February 16, 2026

ஒசூர் புதிய மாவட்ட மருத்துவமனை திறப்பு!

image

ஒசூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப்.16) காலை 10 மணியளவில் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இப்பகுதி மக்களின் உயர்தர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.

News February 16, 2026

ஓசூரில் துணிகர சம்பவம்!

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்த உதயகுமார் (22) ஓசூரில் பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மூக்கண்டப்பள்ளி இ.எஸ்.ஐ. ரிங் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த நபர் உதயகுமாரை மிரட்டி ரூ.300 மற்றும் செல்போனை வழிப்பறி செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்த உஸ்மர் (24) என்பது தெரியவந்தது.

News February 16, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்றைய (பிப்.16) நீர்மட்டம் 49.3 முதல் 49.55 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் தொடர் மழை மற்றும் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 16, 2026

கிருஷ்ணகிரியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

image

தொட்டிநாயக்கனஅள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் முனிராஜ் (13). இந்த சிறுவன் கடந்த 3 மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். இந்நிலையில் பிப்ரவரி 14 வீட்டில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். தகவலறிந்த ராயக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரனனி நடத்தி வருகின்றனர்.

News February 16, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பிப்ரவரி.15 இரவு 10 மணி முதல் இன்று பிப்ரவரி.16 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியல் உள்ளவர்களில் உங்கள் அருமை அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ (அ) 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!