Krishnagiri

News February 17, 2026

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நேற்று (பிப்.16) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

News February 17, 2026

கிருஷ்ணகிரி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

கிருஷ்ணகிரி மலை கிராமங்களுக்கு புதிய தார்சாலை!

image

பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலூர்,தொலுவபெட்டா மற்றும் குல்லட்டி ஆகிய மலை கிராமங்களில் வசிக்கும் 653 இருளர் இன மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. வனப்பகுதி வழியாக சுமார் 9.74 கி.மீ. தொலைவிற்குப் புதிய தார் சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்த தமிழக அரசுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

News February 17, 2026

சிப்காட்டில் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி!

image

சிப்காட்- சூளகிரி தொழிற் பூங்காவில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திக்கான தொகுப்பு அமைப்பதற்கும், விமான இயந்திரங்கள், கியர்பாக்ஸ் உபபாகங்கள் உற்பத்தி மேற்கொள்வதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.5,980 கோடி முதலீட்டில் 8,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 17, 2026

ஓசூர்: நள்ளிரவில் பயங்கர விபத்து!

image

பெங்களூரை சேர்ந்த அஜய்குமார் குடும்பத்துடன் பிப்ரவரி 15-ம் தேதி இரவு காரில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டேனூர் அருகே சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பின்னே வந்த கார் லாரி மீது மோதியது. இதில் காரில் இருந்த அஜய்குமார், சீனிவாச மூர்த்தி, சுனந்தா, சிவகுமார் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

News February 17, 2026

கிருஷ்ணகிரியில் பெண் விபரீத முடிவு; அதிர்ச்சி பின்னணி!

image

அஞ்செட்டி அருகே மாவணட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி மாதேவன்- வெண்ணிலா (34). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் தகராறால் மனமுடைந்த வெண்ணிலா நேற்று (பிப்.16) விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வெண்ணிலா இறந்தார். இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 17, 2026

கிருஷ்ணகிரி KRP அணை நீர்மட்டம் உயர்வு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள KRP அணையில் இன்று (பிப்.17) நீர்மட்டம் 49.3 முதல் 49.35 அடி வரை உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 52 அடி ஆகும். மேலும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நீர்வளத்துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

News February 17, 2026

கிருஷ்ணகிரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

image

கிருஷ்ணகிரி மக்களே! மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி.20 வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரகம் பின்புறம் தொழில் வழிகாட்டு நெறிமுறை மையத்தில் நடைபெறுகிறது. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

கிருஷ்ணகிரி: நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் வாலிபர்!

image

காவேரிப்பட்டினம் அடுத்த கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன், கூலி தொழிலாளி. இவர் கடந்த பிப்-15 அன்று தருமபுரி புல்லட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னே வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 17, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று (பிப்.16) இரவு – இன்று (பிப் .17) காலை வரை ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இரவு 10 மணி முதல் நகரின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் சுற்றி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், வகையில் நடைபெறும் அவசர உதவிக்கு 100-ஐ தொடர்பு கொள்ளவும். ஷேர் பாண்ணுங்க!

error: Content is protected !!