India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் சார்பாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ்,பயனாளிகள் தொழில் துவங்குவதற்கான ஆணைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்ரபாணி ஆகியோர் வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஜூலையில் நடக்க உள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் ஜூன் 24ம் தேதி பிற்பகல் முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் தேர்வு எண், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று
(ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோதமான மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, கல்லுாரி, உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. தலைமையில் நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு இந்திய விமானப்படை தேர்விற்கு இணையதளம் வாயிலாக 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். இத்தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.08.2008 வரை பிறந்த, திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் https://agnipathvayu.cdac.in வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஊத்தங்கரை காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக காவல் துறையின் எச்சரிக்கை மீறி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த 26 கடைகளுக்கு நேற்று ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர் உள்ளிட்டோர் கடைகளுக்கு சீல் வைத்தனர்.
காவேரிப்பட்டணம் போலீசார் மலையாண்டஅள்ளி ஜங்ஷன் சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகம்படும்படி நின்ற 3 பேரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் காவேரிப்பட்டணம் பூமாலை நகரை சேர்ந்த தங்கவேலு(22), மதன்குமார் (22), கோவிந்த செட்டி தெரு அறிவழகன்(21) என தெரியவந்தது. போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
பர்கூர் அடுத்த ஜெகதேவி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சாப்பமுட்லு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கொட்டப்படும் கிரானைட் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீர் பாதித்ததுடன், உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. அதிகாரிகளிடம் புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத, நிலையில் நேற்று கிரானைட் கழிவுகளோடு வந்த 5 டிராக்டர்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளச்சாரம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதன் எதிரொலியாக ஒசூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இயங்கும் 15 தொழிற்சாலைகளில் காவல்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் தலைமையில் மத்திகிரி, பாகலூா் தொழிற்சாலைகளில் போலீசார் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஓசூரில் வரும் (12.07.2024 – 23.07.2024) வரை 13வது புத்தக கண்காட்சி நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.