India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காட்டு யானைகள் கிராமப்புற ஊர்களுக்கு வருவதை தடுக்க வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஜவளகிரி வனப்பகுதியில் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பியுள்ளனர். அதனால் காட்டு யானைகள் குட்டிகளுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்கின்றன. அதனால் காட்டு யானைகள் கிராமப்புறங்களுக்கு வருவது குறைந்துள்ளதாக கூறுகின்றனர். பயிர் சேதங்கள் குறைந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட மா சாகுபடி விவசாயிகள் அவசர கூட்டம் இன்று நடந்தது. மழை இல்லாததால் மா விளைச்சல் வெகுவாக பாதிப்படைந்துள்ளதால் ஏரி குளங்களிலுள்ள தண்ணீரை டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து மா மரங்களுக்கு ஊற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மா மரங்கள் காய்ந்து போனதால் அதற்கேற்றபடி ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் பர்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று கந்திகுப்பம், எலத்தகிரி, வரட்டணப்பள்ளி, நேரலக்கோட்டை, ஒப்பதவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார். முன்னதாக கந்திகுப்பத்தில் பெண்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வேட்பாளரை வரவேற்றனர்.
ஒசூர் அடுத்த சூளகிரி பேரிகை ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து நடிகை விந்தியா இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். சூளகிரி பேரிக்கை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் தெலுங்கு மொழி பேசக்கூடியவர்கள் அதிகம் என்பதால், விந்தியா தெலுங்கு மொழியில் பேசியதால் பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நாகப்பாம்பு தென்பட்டது. இதனை கண்ட மாணவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ரவி தலைமையிலான வீரர்கள் பள்ளியில் உள்ள நாகப்பாம்பை பிடித்து அருகே உள்ள காப்புக்காட்டில் விட்டனர். உடனடியாக பள்ளியில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாசை ஆதரித்து நடிகை விந்தியா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இங்கு பேனாவையே கையில் பிடிக்க முடியவில்லை. டெல்லியில் டைனோசரைப் பிடிக்கிறாராம் என்று கிண்டலாகத் தெரிவித்தார். மேலும், ஆளும் திமுகவை விமர்சித்துப் பேசினார். நிகழ்ச்சியில் விந்தியாவை காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் நேற்று (ஏப்ரல் 9) காலை கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார் தலைமையில் சவலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது விவசாயிகளைக் கண்டு பூரிப்படைந்த வேட்பாளர், அவரும் விவசாயியாக மாறி டிராக்டரில் நிலங்களை உழுது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர்
திரு. வி. ஜெயபிரகாஷ் அவர்கள் இன்று (ஏப்ரல்.9) காவேரிப்பட்டினம் திம்மாபுரம் நெடுங்கல் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பகுதி அதிமுக கழகத் தொண்டர்கள் வேட்பாளருக்கு மலர் தூவி வாணவேடிக்கைகள் வைத்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
ஒசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த சொகுசு பஸ்ஸை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.30 லட்சம் 50 ஆயிரம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி – சிகரலப்பள்ளி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் அந்தப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை இட்டபோது உரிய ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹4 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, சூளகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.