India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஓசூர் வட்டாரத்தில் 1,000 ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை, உரங்கள் வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். ஓசூரில் பிஆர்ஜி 5, பிஆா்ஜி 1 ரகம் ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படுகிறது என்றும், விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 270 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று (ஜூன் 25) வழங்கினார். உடன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கொ. கோபிநாத் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக தெலுங்கில்
பதவியேற்று கொண்டார். நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொ. கோபிநாத், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் II மற்றும் IIA தேர்வுக்கான 2327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளதையொட்டி, இத்தேர்விற்கான இலவச பயிற்சிகள் 20.06.2024 முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
ஊத்தங்கரை, சென்னானூரில் நடைபெறும் அகழாய்வில் 4,000 ஆண்டுகள் பழமையான கல்லாயுதம் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிகளவில் இருந்தது. இங்கு மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவு பொருட்கள் கிடைத்தன.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72,200 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இ.ஆ.ப., வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், சென்னானூர் கிராமத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வில் தற்போது உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இக்கருவி 6 செ.மீ நீளம் மற்றும் 4 செ.மீ அகலம் கொண்டு காணப்படுகிறது.
ஒசூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஊடக பத்திரிகை அலுவலகத்தை நடத்தி வந்த பசவராஜ் என்பவரை கடந்த வெள்ளிக்கிழமை மாலை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்தார். இது தொடர்பாக பஸ்தலப்பள்ளி சிவக்குமார் (23), பங்கார்பேட்டை வெங்கடேஷ் (19) ஆகிய இருவரை ஒசூர் நகர போலிசார் நேற்றிரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சொத்து தகராறில் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சாந்தி மேற்பார்வையில், அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் பங்கஜம் தலைமையில் மரியாலம் அருகே கடிகனத்தம் கிராமத்தில் இன்று கள்ளச்சாராய சோதனை நடந்தது. சோதனையில் அதே பகுதியைச் சேர்ந்த பரேக்கால் என்பவர் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நாலரை லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
ஓசூரில் ஜூலை 12 முதல் 23ஆம் தேதி வரை 13-வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவை பார்வையிட்டு அரிய தகவல்களுடன் கூடிய புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.