Krishnagiri

News June 28, 2024

“ஓசூரில் விமான நிலையம் என்பது நகைச்சுவை”

image

ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், பெங்களூருவிலிருந்து 150 கிலோமீட்டருக்குள் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பது விதி; எனவே அது சாத்தியமில்லாதது என்று பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், பேருந்துகளை கூட வாங்காத திமுக அரசு, விமான நிலையம் அமைப்பதாக கூறுவது நகைச்சுவை என கிண்டலாக தெரிவித்தார்.

News June 27, 2024

கிருஷ்ணகிரி: தேமுதிக சார்பில் ஆட்சியரிடம் மனு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இதுபோன்ற அவலங்கள் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக கிழக்கு மாவட்டசெயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

News June 27, 2024

பல்நோக்கு மருத்துவ முகாம்: ஆட்சியர் துவக்கம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் காவேரி மருத்துவமனை மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டினம் கிளை சார்பில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி சேலம் பைபாஸில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்துகொண்டனர்

News June 27, 2024

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: முதல்வர் அறிவிப்பு

image

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மின்வாகன உற்பத்தியில் வளர்ந்துவரும் ஓசூர் மாநகரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News June 27, 2024

ஓசூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டி

image

ஓசூர் அடுத்த மதகொண்டப்பள்ளியில் உள்ள மாடா்ன் மாதிரி பள்ளி உள் விளையாட்டரங்கில் மாநில அளவிலான ஜூனியா் சதுரங்கப் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டி வரும் ஜூன் 30 வரை 5 நாள் நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 மாணவிகள், 150 மாணவா்கள் என மொத்தம் 240 போ் பங்கேற்றுள்ளனர். போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க விளையாட்டின் தலைவா் சந்தாடி, செயலாளா் லோகேஷ் தொடங்கி வைத்தனர்.

News June 27, 2024

கிருஷ்ணகிரி: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் அனைத்திந்திய இளைஞர் மன்றம், இந்திய தேசிய மாதர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இ.கம்யூ. நகர செயலாளர் உபேத் தலைமை தாங்கினார்.

News June 26, 2024

கிருஷ்ணகிரி: 50% மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

image

ஓசூர் வட்டாரத்தில் 1,000 ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை, உரங்கள் வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். ஓசூரில் பிஆர்ஜி 5, பிஆா்ஜி 1 ரகம் ஓசூர் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்படுகிறது என்றும், விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

News June 26, 2024

கிருஷ்ணகிரியில் இலவச பஸ் பாஸ் வழங்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 270 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று (ஜூன் 25) வழங்கினார். உடன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

News June 25, 2024

கிருஷ்ணகிரி எம்.பி.யா பதவியேற்றார் கோபிநாத்

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கொ. கோபிநாத் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக தெலுங்கில்
பதவியேற்று கொண்டார். நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கொ. கோபிநாத், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

News June 25, 2024

கிருஷ்ணகிரியில் TNPSC: இலவச பயிற்சி வகுப்பு

image

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் II மற்றும் IIA தேர்வுக்கான 2327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டது. முதல்நிலை தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளதையொட்டி, இத்தேர்விற்கான இலவச பயிற்சிகள் 20.06.2024 முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

error: Content is protected !!