India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 இலட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், திறன் பேசி உள்ளிட்ட கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இன்று வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் உள்ளனர்
ஓசூரில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கபடவிருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஓசூர் அருகிலேயே பெங்களூர் விமான நிலையம் உள்ளது. எனவே ஓசூரில் விமான நிலையம் அமைப்பது சாத்தியமாக இருக்காது. மக்களை ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு செயல்படக் கூடாது என்று கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் இன்று முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சுமார் 1,42,082 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் ஜூலை 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சுமார் 1,42,082 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளதாகவும் மேலும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் கொடுத்து பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மாங்கனி கண்காட்சி வருடந்தோறும் கிருஷ்ணகிரியில் ஜூன், ஜூலையில் நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான கண்காட்சி நடைபெற உள்ள இடம் குறித்து ஆட்சியர் கே.எம்.சரயு அவர்கள நேற்று ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள மைதானத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, வருவாய் கோட்டாட்சியர் பாபு மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் என உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வில் புதிய கற்கால கற்கருவி, சுடுமண்ணாலான முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்ட சில்லுகள், கண்ணாடி வளையல் துண்டுகள் தக்களி போன்ற தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் ஏ2 என்னும் அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொழுமுனை கண்டெடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மூலம் சிறு குறு தொழில் மற்றும் வியாபாரம் செய்ய கடன் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று அறிவித்துள்ளார். கடன் பெற விரும்புவோர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி , நகர கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் மா, தென்னை போன்ற மரங்கள் அதிக எண்ணிக்கையில் காய்ந்து கருகின. மேலும் மகசூலும் பாதிக்கப்பட்டது. காய்ந்த மரங்களுக்கான இழப்பீட்டை இயற்கை உரமாக இல்லாமல், ரொக்கமாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் நேற்று நடைபெற்றது. உடன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வந்தனா கர்க், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று 110 விதியின்கீழ் அறிவித்தார். இதையடுத்து, கொமதேக பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஈஸ்வரன், விமான நிலையம் அமைக்கின்ற இடம் பெங்களூருவை ஒட்டிச் செல்லாமல் (ஏனென்றால் பெங்களூருவில் விமான நிலையம் உள்ளது), கிருஷ்ணகிரி அருகே அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்தார்.
Sorry, no posts matched your criteria.