Krishnagiri

News July 11, 2024

கிருஷ்ணகிரி: பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

image

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அரசு பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மூப்பு அடிப்படையில் ஒவ்வொரு சுற்றாக பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 12ஆம் தேதி நடத்தப்படுகிறது என்றார்.

News July 11, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 949816889, பர்கூர் – 9498175515, கிருஷ்ணகிரி – 9498178629, ஓசூர் – 9842788031, தேன்கனிக்கோட்டை – 9498166367. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக மேற்கண்ட எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News July 11, 2024

மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் விதிமீறல் மற்றும் துணை தாசில்தாரை, தாசில்தாராக பதவி உயர்வு வழங்கியதாக புகார் எழுந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேரில் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

News July 11, 2024

ஓசூரில் தொழிற் பயிற்சி சேர்க்கை முகாம்

image

தமிழக அரசு சார்பில் பிரதம மந்திரி தேசிய பயிற்சி(apprenticeship) சேர்க்கை முகாம் வரும் 15-ஆம் தேதி ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய வாளாகத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. முகாமில் 10,+2 ஆம் வகுப்பு மாணவர்கள் (ம) டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தகுதியுடையவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் சேர்ந்து புதிய பயிற்சியாளர் சான்றிதழ் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News July 11, 2024

கிருஷ்ணகிரியில் செஞ்சிலுவை சங்க தேர்தல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கிளைக்கு, தலைவர், துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் இதர பதவிகளுக்கான தேர்தல் வரும் 31ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஆயுள் உறுப்பினர் அட்டை, ஆதார் அல்லது ஏதேனும் ஒரு ஆவணத்துடன் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

மா விவசாயிகளுக்கு இழப்பீடு – பாஜக வலியுறுத்தல்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட பாஜக தலைவா் சிவபிரகாஷ், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தார். மாங்கூழ் தொழிற்சாலை உரிமையாளா்கள், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு உரிய விலை தர மறுக்கிறார்கள் எனவும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

News July 11, 2024

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற அழைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் ஆக.31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 10, 2024

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 6379918140, பர்கூர் – 9498169188, கிருஷ்ணகிரி – 8248346235, ஓசூர் – 9498167939, தேன்கனிக்கோட்டை – 9443513972 ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News July 10, 2024

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

பர்கூர் வட்டம், பட்லப்பள்ளி தரப்பு, பூசிநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 148 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 16 ஆயிரத்து 740 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (10.07.2024) வழங்கினார். உடன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, ஆகியோர் உள்ளனர்.

News July 10, 2024

ஓசூரில் கோலாகலமாக தொடங்கும் திருவிழா

image

ஓசூரில் 13ஆவது புத்தகத் திருவிழா வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து இந்த புத்தக திருவிழாவை வரும் 23ஆம் தேதி வரை நடத்துகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு தலைமை தாங்கும் புத்தகத் திருவிழாவை, அமைச்சர் சக்கரபாணி 12ஆம் தேதி காலை 11 மணியளவில் மூக்கண்டப்பள்ளியில் உள்ள ஓசூர் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!