India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக சார்பில், சூளகிரி ரவுண்டானாவில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் தலைமையில் நடந்த தண்ணீர் பந்தலை ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர் உள்ளிட்டவை வழங்கினார். அப்போது ஒன்றிய துணை செயலாளர் முனிச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கல் விற்பனை, விபச்சார தொழில் உள்ளிட்டவற்றில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரியவந்தால், 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி மூலமோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் இரகசியம் காக்கப்படும் என்று கிருஷ்ணகிரி எஸ்பி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (மே.03), மாவட்டம் முழுவதும் காற்றுடன் பலத்த மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்திராநகர் பகுதியில் வசித்து வரும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பிவி வரதராஜன் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் மீது தனக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இதனால் பாஜ கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலால் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில விவசாயிகள் தங்களின் கிணற்றில் உள்ள கொஞ்சம் நஞ்சம் தண்ணீரை கொண்டு பண்ணப்பள்ளி, அலேகுந்தாணி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வெள்ளரிக்காய் அமோக விளைச்சலை கண்டுள்ளது. 1 கிலோ ரூ.65-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி கோட்டை. பல்வேறு போர்களையும், பல ஆட்சிகளைக் கண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை விஜயநகர பேரரசின் காலத்தில், 15-16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோட்டையை கைப்பற்றுவதற்காகவே பல போர்களும் நடத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வசம் இக்கோட்டை சென்றபோது ஆயுத கிடங்காக மாறியிருந்தது. தற்போது வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி கோட்டை. பல்வேறு பல போர்களையும், பல ஆட்சிகளைக் கண்ட பெரிய வரலாற்றைக் கொண்ட இக்கோட்டை விஜயநகர பேரரசின் காலத்தில், 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோட்டையை கைப்பற்றுவதற்காகவே பல போர்களும் நடத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் வசம் இக்கோட்டை சென்ற போது ஆயுத கிடங்காக மாறியிருந்தது. தற்போது வரலாற்றுச் சின்னமாக கம்பீரமாக நிற்கிறது.
தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரிக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு ஊராட்சியில் உள்ள டி.கொத்தப்பள்ளி பகுதியில் உள்ள திரவுபதி தர்மராஜ சுவாமி கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. டி.கொத்தப்பள்ளி, கூட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். அருள் வந்து ஆடிய கோவில் பூசாரி முறம் மற்றும் துடைப்பத்தால் பக்தர்களை அடித்து ஆசி வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.