Krishnagiri

News May 8, 2024

கிருஷ்ணகிரி: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரியில் மே 10ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி கிருஷ்ணகிரி உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 7, 2024

கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் திருவிழா

image

கெலமங்கலத்தில் பட்டாளம்மன் கோவில் தேர்திருவிழா மே 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு பட்டாளம்மனை வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதற்காக சத்தியம்மா உருவ பொம்மையை 5 இடங்களில் வைத்து வழிப்பட்டனர். மேலும், வீட்டில் சமைத்த தயிர் சாதத்தை கொண்டு வந்து பக்தர்கள் படைத்தனர். அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு கிடா வெட்டி பூஜை செய்தனர்.

News May 7, 2024

கனமழை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

image

ஊத்தங்கரை பகுதியில்
கடுமையான கத்திரி வெயிலுக்கு மத்தியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி கல்லாவி, காரப்பட்டு, சிங்காரப்பேட்டை, பெரிய தள்ளப்பாடி,
அனுமன் தீர்த்தம் போன்ற பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

News May 7, 2024

கிருஷ்ணகிரி பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு

image

கிருஷ்ணகிரியில் பிரபலமான முறையில் இயங்கிவரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டில் (2024-2025) மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு இந்த ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பயனடைந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2024

கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

News May 6, 2024

கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 6, 2024

கிருஷ்ணகிரியில் மழை…!

image

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாளை 7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 6, 2024

கிருஷ்ணகிரி உள்ள பைரவர் நிலையம்!

image

கிருஷ்ணகிரியில் உள்ள பைரவர் சுவாமி ஆசிரமம் ஒரு ஆன்மீக மையமாக செயபட்டு வருகிறது. 2013இல் தொடங்கப்பட்ட இந்த நிலையம், பைரவ சுவாமி என்பவரால் தொடங்கப்பட்டது. இது, கடவுள் பக்தி, பூஜைகள், திருவிழாக்கள் போன்றவையை எடுத்துரைக்கிறது.இந்த நிலையம், கந்திக்குப்பம் அருகே அடர்ந்த காட்டில் ஸ்ரீ பைரவநாதர் கோயில் உள்ளது. மக்கள் பலரும் இந்த அசிரமத்திற்கு வருகை புரிகின்றனர்.

News May 6, 2024

+2 RESULT: கிருஷ்ணகிரியில் 17,339 பேர் தேர்ச்சி

image

கிருஷ்ணகிரி மாவட்ட +2 தேர்ச்சி விபரம்: தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,732; தேர்ச்சி பெற்ற மாணவர்கள் – 7801; மாணவர்கள் சதவிகிதம் – 89.34%; தேர்வு எழுதிய மாணவிகள் – 10,142; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,538; மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம் – 94.04%; தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவியர்களில் 17,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்தம் தேர்ச்சி விகிதம் 91.87 சதவீதம் ஆகும்.

error: Content is protected !!