India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுசேமிப்புத்துறை சார்பாக, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கே.எம்.சரயு இன்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி.உமா உத்தரவிட்டுள்ளாா். ஒசூா் நகர காவல் ஆய்வாளா் சிவகுமாா் பாகலூருக்கும் , சேலம் கருமலைகூடல் காவல் ஆய்வாளா் முருகன் ஊத்தங்கரைக்கும் , ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் கந்தவேல் சேலம் தலைவாசலுக்கும் , தலைவாசல் காவல் ஆய்வாளா் சாவித்திரி ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், முதியோர் உதவித்தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 244 மனுக்களை இன்று கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு பெற்றுக்கொண்டார். தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமாலைப்பட்டி பகுதியை சேர்ந்த தனபால் மற்றும் அவரது மனைவி ஜோதிமணி ஆகியோர் ஸ்ரீ குமரன் பைனான்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சீட்டு நடத்தி மோசடி நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை இழந்த பொதுமக்கள் இன்று 29-தேதி ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் (PUPS) விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் தைக்கப்பட்டுள்ள முதல் இணை சீருடைகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர், தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக முழுவதும் கள்ளச்சாராய தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி மற்றும் கிட்டம்பட்டி மலைப்பகுதியில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி உமா தலைமையில் கிருஷ்ணகிரி எஸ்பி தங்கதுரை உட்பட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட முன்னாள் முப்படை மற்றும் துணை இராணுவ படை வீரர்கள், வீரமங்கையர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கார்கில் போர் வெற்றியின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று கார்கில் போரில் வீரமரணமடைந்த சபியுல்லா அவர்களின் மனைவி முபாரக் அவர்களுக்கு கேடயம் வழங்கினார்.
கோவையில் அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 முதல் 5ஆம் தேதி வரை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் எனவும், ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் பல பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்தி சிலை அருகில், தமிழகத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் கோபிநாத் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ண மூர்த்தி, நாராயணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.