India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் பில்லப்பா. இவர் கடந்த மார்ச் 5ம் தேதி பைக்கில் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டுவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. “Drink and Drive” காரணமாக பல விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உங்க கனவை சொல்லுங்க திட்டத்தின் ஒரு பகுதியாக கனவுகள் மெய்ப்படும் என்ற தலைப்பில் சென்னை வர்த்தக மையத்தில் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ-க்கள், எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <

கிருஷ்ணகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <

கிருஷ்ணகிரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள, கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கான விற்பனை மதி அங்காடியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ்குமார் நேற்று திறந்து வைத்தார் . இந்நிகழ்வில் ஊரக வாழ்வாதார இயக்குநர் பெரியசாமி கலந்து கொண்ட நிலையில்,விற்பனை தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்தர்ஜித் அவருடைய நண்பர் நிரஞ்சன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடிரென இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் தவறி விழுந்தது. இதில் நிரஞ்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தர்ஜித் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.