Krishnagiri

News July 31, 2024

கிழங்கு சாப்பிட்டவர் உடல் வீங்கி உயிரிழப்பு

image

ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன், வீரியம் மிக்க காட்டு கருணைகிழங்கு வகை கிழங்கு ஒன்றை ஆரோக்கியத்திற்கு நல்லது என நினைத்து வேகவைக்காமல் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது முகம் மற்றும் வயிறு வீங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News July 31, 2024

மாநகர கூட்டத்தை புறக்கணித்த துணை மேயர் 

image

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் சத்யா தலைமையில் இன்று மாநகர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை புறக்கணித்த துணை மேயர் ஆனந்தய்யா, 13 திமுக மாமன்ற உறுப்பினர்களுடன் ஒசூர் – பாகலூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் தனியாக ரகசிய கூட்டம் நடத்தி உள்ளார். மாநகர கூட்டத்தை நடத்துவதை தடுக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டதா? மாநகர மேயர் சத்யா மீதான அதிருப்தியால் நடத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

News July 31, 2024

3 பேரைக் கொன்ற மக்னா காட்டு யானை பிடிபட்டது

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அடுத்துள்ள பன்னார்கட்டா தேசிய பூங்காவை ஒட்டி உள்ள கிராமப்பகுதிகளில் மக்னா காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வந்தது. பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வந்த இந்த மக்னா காட்டு யானை, அந்த பகுதியில் அடுத்தடுத்து 3 பேரை தாக்கிக் கொன்றது. இதையடுத்து நேற்று கும்கி யானை உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை பிடித்தனர்.

News July 31, 2024

கிருஷ்ணகிரியில் அமைச்சர் சுற்றுப் பயணம்

image

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் கலந்து கொள்ள உள்ளார். காலை 10 மணிக்கு குருபரபள்ளி, சிக்காரிமேட்டில் நரிக்குறவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியும், காலை 10.30 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை இயக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

News July 31, 2024

கிருஷ்ணகிரியில் வங்கி கடன் குறித்த விழிப்புணர்வு முகாம்

image

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் இந்தியன் வங்கி சார்பில் ஆட்டோ டிரைவர்கள், வியாபாரிகள் , மகளிர்க்கான சிறு, குறு தொழில் வங்கிக்கடன் குறித்து விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், சிறு, குறு தொழில்கள், மகளிர்க்கான குழு கடன்கள் அனைத்து வங்கிகளிலும் ரூ. 25 லட்சம் வரை பெற முடியும் என வங்கி மேலாளர் மோகன் கூறினார். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் , வியாபரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

News July 30, 2024

கிருஷ்ணகிரி பெயர்க் காரணம் தெரியுமா?

image

கிருஷ்ணா என்பது கருப்பு என்றும், கிரி என்பது மலை என்றும் பொருள். கறுப்பு கிரானைட் மலைகளுடன் அமைந்துள்ளதால் கிருஷ்ணகிரி என பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இப்பகுதி வந்ததால், இம்மன்னர் பெயரிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. உங்களுக்கு கிருஷ்ணகிரியை பிடிக்குமா? கமெண்ட் செய்யவும்

News July 30, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்த மாபெரும் தலைவர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் தொரப்பள்ளியில் மூதறிஞர் ராஜாஜி பிறந்தார். இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநராக இவர்தான் இருந்தார். முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்றவர்களில் ராஜாஜியும் ஒருவர். சென்னை மாகாண முதலமைச்சராகவும் இருந்துள்ளார். பல சாதனைகளை புரிந்துள்ள மூதறிஞர் ராஜாஜி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிறந்தது தனிச் சிறப்பாகும். ராஜாஜியை உங்களுக்கு பிடிக்குமா??

News July 30, 2024

ஓசூரில் செயற்கை நுண்ணறிவு கேமிரா மையம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ,ஓசூர் வனக்கோட்டம் 1,492 சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இவை விளை நிலங்களில் அவ்வப்போது புகுந்து அவற்றை சேதப்படுத்துவதுடன் உயிர் பலியை ஏற்படுத்தி வருகின்றன. எனவே யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 17 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சாந்தி, பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.

News July 29, 2024

நீங்கள்  பெரியமலைக்கோட்டைக்கு செல்ல வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ககனகிரி எனும் பெரியமலைக் கோட்டை கிருஷ்ணகிரியிலிருந்து 27 கி.மீ தூரமும், ஓசூரிலிருந்து 67 கி.மீ தொலைவிலும், ஊத்தங்கரையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் உள்ளது. மலையேற்றம் செல்ல சிறந்த இடமாகவும் இந்த மலைக்கோட்டை உள்ளது. மலையேற்றம் மற்றும் கோவிலுக்கு செல்ல விரும்புவோர் முதலுதவி வசதியோடு சென்றால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.

News July 29, 2024

இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரம். ஊத்தங்கரை – 9498167897, பர்கூர் – 9498106530, கிருஷ்ணகிரி – 9498167900, ஓசூர் – 9498169256, தேன்கனிக்கோட்டை – 9498166367. பொதுமக்கள் அவசர தேவைகளுக்காக இந்த எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!