Krishnagiri

News August 2, 2024

கல்குவாரிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி ஊராட்சிகளில் இயங்கி வரும் கிரானைட் மற்றும் சாதாரண கல்குவாரிகளில் விதிமீறல்கள் குறித்து சேலம் சரக காவல் துறை தலைவர் இ.எஸ். உமா இ.கா.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு , மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் உடன் உள்ளனர்.

News August 2, 2024

ரூ.3½ கோடியில் வளர்ச்சி பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி, சூளகிரி மற்றும் ஓசூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.3 கோடியே 56 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் சாலை பணிகள், நூலக கட்டிடம் உள்ளிட்ட புதிய திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் , ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 2, 2024

கிருஷ்ணகிரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

image

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில் இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பீகாருக்கு ரூ. 31 கோடியும், ஆந்திராவுக்கு ரூ. 16 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கி உள்ளனர். மேலும், பாஜகாவிற்கு ஆதரவு அளித்த மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளது கண்டிக்கத்தக்கது என ராமச்சந்திரன் எம்எல்ஏ தனது கண்டன உரையை ஆற்றினார்.

News August 1, 2024

இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 1, 2024

கிருஷ்ணகிரி – பெங்களூர் புதிய பேருந்துகள்

image

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை சார்பாக, கிருஷ்ணகிரி – பெங்களூர் வழித்தடத்திற்கான புதிய பேருந்துகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (31.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தே. மதியழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News August 1, 2024

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் திறப்பு

image

தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ. 8.26 கோடியில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலத்தை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி நேற்று திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எம். சரயு, பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மதியழகன் முன்னிலை வகித்தனா். 

News August 1, 2024

ஓசூர் மாநகராட்சி கூட்டம் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

image

ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை ஆணையா் டிட்டோ முன்னிலை வகித்தாா். அதிமுக கவுன்சிலர்களின் வாா்டுகளில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்திலிருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனா். திமுக கவுன்சிலர்களும் கூட்டத்தை புறக்கணித்து தனியாா் உணவகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

News August 1, 2024

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் வசூல்

image

கடந்த 5 ஆண்டுகளில் எல்&டி கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடியில் 1,124.19 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 981.56 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று ராஜ்யசபாவில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

News July 31, 2024

வேறு நாளில் கூட்டம்: மேயரை சந்தித்து கடிதம் 

image

ஒசூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சத்யா தலைமையில் இன்று மாமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில் 19 கவுன்சிலர்கள் புறக்கணித்து தனியார் ஓட்டலில் கூட்டத்தை நடத்தினர். இந்நிலையில், ஆனந்தய்யா தலைமையில் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் மேயரை நேரில் சந்தித்து வேறு நாளில் கூட்டத்தை நடத்த கடிதம் வழங்கியுள்ளனர்.

News July 31, 2024

கிருஷ்ணகிரி – பெங்களூரு வழித்தடத்திற்கு புதிய பேருந்துகள்

image

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, எண்ணேகொள்புதூர், போடரஅள்ளி வழியாக சாப்பர்த்தி வரையிலான போக்குவரத்து வழித்தடத்தை நீட்டித்தும், கிருஷ்ணகிரி – பெங்களூரு வழித்தடத்திற்கான புதிய பேருந்துகளை கொடியசைத்தும் அமைச்சர் சக்கரபாணி இன்று துவக்கி வைத்தார்.

error: Content is protected !!