Krishnagiri

News August 7, 2024

திமுகவில் இணைந்த ஊத்தங்கரை அதிமுக கிளைச்செயலாளர்

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம், பெரியக்கொட்டக்குளம், ஊராட்சியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் முருகேசன் மற்றும் அதிமுக பிரதிநிதி சக்திவேல் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான மதியழகன் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தனர். அவர்களை மதியழகன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News August 7, 2024

கிருஷ்ணகிரி திமுக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

image

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகந் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர மன்ற தலைவர் பரிதா நவாப், உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்ட்ரல் தியேட்டரில் இருந்து ஊர்வலமாக சென்று ராயக்கோட்டை மேம்பாலம் அருகே உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News August 7, 2024

தொடர் மலையால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 396 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 621 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 52 அடியில் நேற்று 50.55 அடியாக இருந்தது.

News August 7, 2024

கிருஷ்ணகிரியில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.

News August 7, 2024

ஆயத்த ஆடை அலகு அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.3 இலட்சம் வழங்கிட அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தையல் தொழிலில் முன் அனுபவம் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 10 நபர்களை கொண்ட உறுப்பினர்கள் இதற்கான விண்ணப்பங்களை
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

கிருஷ்ணகிரியில் ரூ.7¼ லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத்தில் திருடு போன ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 50 செல்போன்களை மீட்டனர். இதை எஸ்பி நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், தொலைந்து போன செல்போன் தொடர்பான புகார்களுக்கு www.ceir.gov.in என்ற வலைதளத்தில் புகாரளிக்கலாம்.

News August 6, 2024

இரவு ரோந்து காவலர்களின் விவரம் வெளியீடு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து காவலர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்தங்கரை – 9498170295, பருகூர் – 9498106530, கிருஷ்ணகிரி – 9444602728, ஓசூர் – 9498185796, 9842788031, தேன்கனிக்கோட்டை – 9498178425. அவசர உதவிக்கு இந்த எண்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 6, 2024

பர்கூரில் மனைவி கொலை செய்த கணவன்

image

பர்கூர் கரீம் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ்(70) மனைவி பாலம்மாள்(65). இவர்கள் 2 பேரும் தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு 2 பேரும் வீட்டின் மாடியில் உள்ள அறையில் ரத்தக்கறையுடன் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மோற்கொண்டதில் நாகராஜ் தாக்கியதில் பாலம்மாள் உயிரிழந்ததும், அதனை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

News August 6, 2024

கால அவகாசம் நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஒசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024- 25 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான இறுதி வாய்ப்பு ஆக 16 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் அனைவரும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கையில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

சீர் மரபினருக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த
சீர்மரபினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கல்விக்கான அதிகாரமளித்தல், சிறப்பு காப்பீடு திட்டம், நிலம் மற்றும் வீடு கட்ட நிதி அளித்தல் திட்டத்தில் பயன்பெற மத்திய அரசின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், ஆட்சியர் அலுவலக அறை எண்11ல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!