India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, கண் பார்வையற்ற மற்றும் காது கேளாதோர் என 55 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 இலட்சத்து 34 ஆயிரத்து 195 மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று வழங்கினார். உடன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், என்சிசி முகாமில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை செய்யப்டும் என்று கூறினார் . மேலும் பாலியல் தொல்லை புகார் குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார்.
கிருஷ்ணகிரி ஆட்சியர் சரயு இன்று அளித்த பேட்டியில், என்சிசி முகாம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் எந்த நடைமுறையும் பின்பற்றவில்லை.என்சிசி முகாம் நடத்தியவர்களின் பின்னணி குறித்து பள்ளி நிர்வாகம் விசாரிக்கவில்லை.என்சிசி முகாம் நடந்த அன்று அங்கிருந்த மானவைகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது .மேலும், எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம் நடைபெற்றது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார் .
கிருஷ்ணகிரி அருகே என்சிசி முகாமில் மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்றது. இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், என்சிசி தலைமை அலுவலகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த என்சிசி முகாமும் நடத்தப்படவில்லை என்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்த முகாம் போலியானது எனவும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது .
கிருஷ்ணகிரி அருகே 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மேலும் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 17 மாணவிகள் பயிற்சிக்கு சென்ற நிலையில், 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பாலியல் வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து நிலையில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி அருகே 12 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் நா.த.க. நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை நள்ளிரவில் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே பாலியல் வழக்கில் தனியார் பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பர்கூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிகோட்டை, சூளகிரி, அச்சமங்கலம், கோட்டையூர், புலிகுண்டா, சூலாமலை, அனுமந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
கிருஷ்ணகிரியில் கந்திகுப்பம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற என்.சி.சி. முகாமில் 17 மாணவிகள் தங்கி பயிற்சி பெற்றுள்ளனர். அப்போது 13 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தாளாளர் உட்பட 7-பேர் தற்போது கைதாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி நாதக முன்னாள் நிர்வாகி சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என கமென்ட் செய்யவும்.
Sorry, no posts matched your criteria.