Karur

News February 25, 2026

கரூர்: உங்கள் வீட்டில் சிலிண்டர் இருக்கா?

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். (ஷேர் செய்யுங்கள்)

News February 25, 2026

கரூரில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04324-225100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

கரூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News February 25, 2026

கரூர்: பட்டா, சிட்டா இனி ஆன்லைனில்!

image

பட்டா மாற்றம் & நில அளவீடு: tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள் பதிவிறக்கம்: பட்டா, சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் (FMB) பெற eservices.tn.gov.in தளத்தைப் பயன்படுத்தலாம்.

வரைபடங்கள்: கிராம வரைபடம் மற்றும் நில அளவை எண் விவரங்களுக்கு tnlandsurvey.tn.gov.in இணையதளத்தை அணுகலாம். மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News February 25, 2026

கரூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

கரூருக்கு புதிய கலெக்டர்!PHOTO

image

கரூரின் புதிய ஆட்சியராக கு.ரவிக்குமார் நேற்று மாலை 5 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார். பொன்னேரி துணை ஆட்சியராகப் பணிபுரிந்த இவர், பதவி உயர்வு பெற்று கரூர் மாவட்டத்தின் 20-வது ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை முக்கிய அதிகாரிகள் நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

News February 25, 2026

அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஆவேசம்!

image

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நேற்று பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு தமிழக மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கியுள்ளது; இந்த ஆட்சியை அடியோடு அகற்றிடத் தமிழக மக்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர்” என பேசினார்.

News February 25, 2026

கரூர்: இரவு நேர ரோந்து காவலர் விவரம்

image

கரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக நேற்று (பிப்.24) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.25) காலை 6 மணி வரை சிறப்பு ரோந்துப் பணிக்குக் காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசரத் தேவைகள் அல்லது புகார்களுக்கு அந்தந்த உட்கோட்ட அலுவலர்களைத் தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 24, 2026

சிந்தலவாடி அருகே விபத்து

image

கரூர் சிந்தலவாடி அருகே சாலையில் சுரேஷ் என்பவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அதே வழியில் அடையாளம் தெரியாத வாகன மோதியதில் கை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News February 24, 2026

கரூர்: அதிமுகவில் இணைந்தனர்

image

கரூர் அதிமுக அலுவலகத்தில் இன்று (24.2.2026) மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் விஜயபாஸ்கர் தலைமையில், அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்து இருப்பது மாற்றுக்கட்சியினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!