Karur

News November 21, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25ம் தேதி கேஸ் ஏஜென்சி மற்றும் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் டிஆர்ஓ தலைமையில் நடைபெற உள்ளது. கேஸ் சிலிண்டர் வழங்குவதில் குறைபாடு ஏஜென்சி மெத்தன போக்கு உள்ளிட்ட குறைகளை நுகர்வோர்கள் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

கரூர் அருகே வழிப்பறி: மூன்று பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தை சேர்ந்தவர் குணசேகரன் (33). இவர் கடந்த, 18 இரவு கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் அமர்ந்திருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (21) மற்றும் 16 வயதுடைய 2 சிறுவர்கள் கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போன், ரூ.1,500 பணத்தினை பறித்து சென்றனர். இதுகுறித்து, அவர் அளித்த புகார்படி, 3 பேரை கரூர் டவுன் போலீசார் நேற்று கைது செய்தனர். 

News November 20, 2024

கால்வாயில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

image

கரூர் மாயனூர் அருகே தண்ணீர் பாலம் பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவர் மாயனூர் இரட்டை வாய்க்கால் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து அருகில் இருந்த பொதுமக்கள் வாய்க்காலில் இறங்கி தேடி குழந்தையை சடலமாக மீட்டனர்.

News November 20, 2024

தமிழக அளவில் முதலிடம் பிடித்த மாணவன் 

image

கரூர் மாநகராட்சியில் உள்ள சிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஹரன், மல்யுத்த போட்டியில் 100 கிலோ பிரிவில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளி தலைமையாசிரியரிடம் சான்றிதழ் காண்பித்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பெற்றார். உடன் விளையாட்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News November 20, 2024

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

image

குளித்தலை அருகே நங்கவரத்தை அடுத்துள்ள தமிழ்சோலையை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மகன் ரோகித் ஷர்மா(6). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தார் அப்போது. மின்சாரம் தாக்கி சிறுவன் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 19, 2024

கரூர் தலைப்பு செய்திகள்

image

1.கரூர் மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
2.கரூரில் நூல் ஏற்றி வந்த பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து
3.க.பரமத்தி அரசுப்பள்ளி கட்டுமான பணிகள் – கலெக்டர் ஆய்வு
4.ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு வெளியீடு
5.புலியூர் அருகே டூவிலர் மோதி ஒருவர் படுகாயம்

News November 19, 2024

கரூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்

News November 19, 2024

ரேஷன் கடை நேர்முகத்தேர்வு அனுமதி சீட்டு

image

கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை காலிப்பணியிட நேர்முகத் தேர்வுக்கு அனுமதி சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார். தகுதியானவர்களுக்கு வரும் டிசம்பர் 2 முதல் 8 வரை கரூர் அரசு கலைக் கல்லூரியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. அனுமதி சீட்டு https://drbkarur.net என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News November 19, 2024

கரூரில் இன்று மழை பெய்யலாம் 

image

கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், அரவக்குறிச்சி, ஆணைபாளையம், பரமத்தி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், பஞ்சப்பட்டி, மயிலம்பட்டி, கடவூர், பாலவிடுதி, வெஞ்சமாங்கூடலூர், மலைக்கோவிலூர், பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், கல்லுமடை, மணவாடி, வெள்ளியணை, வாங்கல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

News November 19, 2024

“உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்”

image

அரவக்குறிச்சியில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம்” நாளை (20.11.24) நடக்கிறது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, ஆகிய இடங்களில் இம்முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!