Karur

News November 23, 2024

கரூர் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2024 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News November 23, 2024

கரூர் மாவட்டத்தில் இன்று கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்!

News November 23, 2024

கரூர் மக்களுக்கு சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

image

கரூரில் 2024ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 20.12.24 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 22, 2024

மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு

image

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூரில் கிராம சபை கூட்டம்-  கலெக்டர் அழைப்பு

image

கரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் வரும் 23.11.2024 அன்று காலை 7:00 மணி முதல் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சிகளின் நடக்க இருக்கும் பொது பணிகள், சாலை வசதி திட்டம், உயர் கல்வி, மகளிர் சுய உதவி குழு கடன் தொகைகள் ஆகியவற்றைப் பற்றி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

கரூர்: இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி ➤அதானி நிறுவனத்துடன் தொடர்பில்லை: அமைச்சர் பேட்டி ➤அரவக்குறிச்சியில் குடகனாறு வெள்ள அபாய எச்சரிக்கை ➤கரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ➤கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு ➤கரூர் அருகே வழிப்பறி: மூவர் கைது ➤குத்துச்சண்டை போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் ➤குளித்தலையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

News November 21, 2024

அரவக்குறிச்சியில் குடகனாறு வெள்ள அபாய எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடகனாறு அணையின் நீர்மட்டம் 26 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோரம் இருக்கும் அரவக்குறிச்சி, கூம்பூர், ஈசநத்தம், ஆர்.வெள்ளோடு, திருக்கோர்ணம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மூன்றாம் முறையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இத்தகவலை குடகனாறு அணை பிரிவின் உதவி பொறியாளர் மகேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

News November 21, 2024

கரூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு வரும் நவ 23ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பஞ்சாயத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், ஜல்ஜீவன் திட்டம் தூய்மை பாரத திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என கரூர் கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!