Karur

News March 18, 2024

கரூர்: ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

image

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டமங்கலம் ராசம்மாள் கல்வி நிறுவனம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இன்று ஈடுபட்டுள்ளனர். அப்போது, ஈச்சர் வேனில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,47,620 பணம் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூஸ் கம்பெனி ஊழியர் பிரகாஷ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News March 18, 2024

கரூர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ்

image

மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணி போட்டியிடு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தேர்தலிலும் அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது.

News March 18, 2024

கரூர் மக்களின் கவனத்திற்கு

image

கரூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2024

கரூரில் விற்பனை ஜோர்!

image

கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர்.

News March 16, 2024

கரூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 27 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.