Karur

News March 28, 2024

கரூரில் 56 மனுக்கள் ஏற்பு

image

கரூரில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 62 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று மாவட்ட தேர்தல் அதிகாரி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. அதில், 56 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

News March 28, 2024

கரூரில் ஜோதிமணி பேட்டி

image

கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்து, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியதில், தமிழ்நாட்டில் மக்கள் மோடி ஆட்சிக்கு எதிராக கொலை வெறியாக உள்ளனர். இப்போது 5 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி, மக்கள் கஷ்டப்படும் போது ஏன் வரவில்லை. எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் நடக்காது என்றார்.

News March 27, 2024

கரூர்: 62 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 62 வேட்பாளர்கள் 67 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் வேட்பாளர் தங்கவேல் 3 வேட்பு மனுக்களையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 2 வேட்பு மனுக்களையும் அதே நாளில் தாக்கல் செய்தனர். இன்று மட்டும் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

News March 27, 2024

கரூரில் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனுவை ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வழங்கினார். இதில் வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டு சரி பார்த்து உறுதிமொழி வாசகத்தை கொடுத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். உடன் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சக்கரபாணி மற்றும் தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 26, 2024

கரூர்: 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்

image

கரூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 58 தேர்வு மையங்களில் 11, 556 மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 463 பேர் என மொத்தம் 12 ஆயிரத்து 019 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களாக 58 தலைமை ஆசிரியர்களும், 58 துறை அலுவலர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 935 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன

News March 26, 2024

கரூரில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் அதிமுக வேட்பாளர்

image

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தங்கவேல் தாந்தோணி கிழக்கு ஒன்றியம் பாகநத்தம், கொடையூர் வெடிக்காரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஈடுபட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

News March 25, 2024

நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

image

இன்று கரூரில் நம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வேட்பு மனுவை ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பாளர் கருப்பையா வழங்கினார். இதில், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் 25க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

News March 25, 2024

பாஜகவினர் வேட்புமனு தாக்கல்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன், தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பு மனுவை வழங்கினார்கள். இதில் வேட்பு மனுவை சரிபார்த்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் உறுதிமொழி ஏற்பு நகலை பூர்த்தி செய்து தருமாறு வேட்பாளர் செந்தில்நாதனிடம் வழங்கினார்கள். உடன் கூட்டணி கட்சி (ம) கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

அதிமுகவினர் வேட்புமனு தாக்கல்

image

கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கலை தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வழங்கினார்கள். இதில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சின்னசாமி வேட்பாளர் தங்கவேல் கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

News March 25, 2024

தேர்தல் விழா: வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) அதிமுக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.