India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்ட கலெக்ட்ர் அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பெண்குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வு கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு கீழ் திருமணம் செய்து வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
1.கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
2.காந்திகிராமத்தில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
3.உணவின் தரம் குறித்து ஆட்சியர் ஆய்வு
4.கல்லூரி மேலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
5.விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் ஆண்டிப்பட்டிகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இன்று (05.12.2024) ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளிடம் நேரடியாகவே உணவின் தரத்தின் குறித்து உண்மை தன்மைகளை கேட்டறிந்தார்.
நொய்யல், காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டை மங்கலம், குந்தாணி பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இன்று பூக்களை ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டுமல்லி கிலோ ரூ.1600க்கும், சம்பங்கி பூ ரூ.160க்கும், அரளிப்பூ ரூ.300க்கும், ரோஜாப்பூ ரூ.220க்கும், முல்லைப்பூ ரூ.1100க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நொய்யல், காளிபாளையம், குளத்துப்பாளையம், வேட்டை மங்கலம், குந்தாணி பாளையம் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் இன்று பூக்களை ஏலம் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர். இதில் குண்டுமல்லி கிலோ ரூ.1600க்கும், சம்பங்கி பூ ரூ.160க்கும், அரளிப்பூ ரூ.300க்கும், ரோஜாப்பூ ரூ.220க்கும், முல்லைப்பூ ரூ.1100க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
நொய்யல் ஆற்றின் தடுப்பணையின் இன்றைய நீர்நிலை மட்டம் நீர்வளத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கு 42 கனஅடி நீர் வருகிறது. அணையின் தற்போதைய நீர் நிலை மட்டம் 26.90 கன டியாக உள்ளது. அணையில் தற்போது நீர் இருப்பு 175.020 டி.எம்.சி.யாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 181.761 (235) கன டி நீர். மேலும் தொடர் மழையின் காரணமாக 30 கனஅடி நீர் வெளியேறுகிறது.
கரூர் மாவட்டம் வெள்ளியணை, தாளியாபட்டி, உப்பிடமங்கலம் கிழக்கு, கருப்பூர், க.பரமத்தி, மோலப்பாளையம், தென்னிலை கீழ்பாகம் முல்லை நகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது. இங்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் இதுவரை மொத்தம் 25,844 விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கரூரில் வாழும் விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்காக தமிழக அரசு மானியத்தொகையாக ரூ.15,000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேளாண் துணை இயக்குநர், வேளாண் வணிகம், 9442556138 மற்றும் வேளாண்மை அலுவலர்கள் 9500416678, 9942286337, 9489508735 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் கொடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியாளர் சுவாதிஸ்ரீ தலைமையில் ஆதிதிராவிடர் நலம் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.