India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர்: வழக்கறிஞரும், அதிமுக பிரமுகருமான பச்சையப்பன் மற்றும் திமுக பிரமுகரும், கரூர் மாநகராட்சி உறுப்பினருமான பாண்டியன் ஆகியோரின் சகோதரர் எம்.தனபால் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் வெங்கமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவிற்கு அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1.தொடர்புத்துறை அமைச்சரை சந்தித்து கரூர் எம்பி மனு
2.கரூரில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு சிறை
3.கரூரில் கொடூர கொலை: 2 பேரிடம் விசாரணை
4.அமராவதி தடுப்பணைக்கு 1079 கன அடி நீர் வருகை
5.IUM கட்சி மாநில நிர்வாகி துணை முதல்வரிடம் வாழ்த்து
கரூர் அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை விரைவு அஞ்சல் பிரிப்பு மையமாக (Intra Circle Hub- ICH ) தரம் உயர்த்தித் தரக்கோரி ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் திரு.ஜோதிராதித்ய சிந்தியா அவர்களை இன்று (18.12.2024) சந்தித்து கடிதம் கரூர் எம்பி ஜோதிமணி வழங்கினார். மேலும் கரூர் மாவட்டம் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க ஜவுளி மையமாகவும், இந்தியாவின் நான்காவது பெரிய ஏற்றுமதி நகரமாகவும் உள்ளது என்று கூறினார்.
குமரிமுனையில் வானுயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப்போட்டி 28.12.2024 விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கலந்துகொள்ளும் போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் எழுத்துத்தேர்வு 21.12.2024 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கரூரில் நடைபெறும் மேலும் விபரங்களுக்கு 9788858701 தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சியில் குடிநீர், சாலை வசதி போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளை சரி செய்ய கோரியும் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உடனடியாக செயல் அலுவலர் நியமனம் செய்யவில்லை எனில் மக்களை திரட்டி பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணையைச் சேர்ந்த 47 வயது நாடக நடிகர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கரூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அவரை போக்சோ சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் சிறுமியின் தந்தைக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த வலையப்பட்டி சுற்று வட்டார கிராம பகுதிகளில் மழை பெய்ததால் சம்பா நெல் சாகுபடி செய்த விளை நிலங்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் வலுவிழந்து சாய்ந்து சேதம் அடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தில் அதற்கான இழப்பீடு தொகை பெறுவதற்கு கள ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1.தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம்
2.கரூர்: ITI படித்தோருக்கு கப்பல் கம்பெனியில் வேலைவாய்ப்பு
3.டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்பு
4.லாலாபேட்டையில் வெற்றிலை விலை சரிவு
5.மாயனூர் கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டு மகாநாதபுரம் கட்டளை மீட்டு வாய்க்கால் கரைஓரத்தில் இன்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த அடையாளம் தெரியாதா ஆண் பிணம் கிடந்தது. தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் உடலை கைப்பற்றினர். பின்பு பிரதேபரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி காளிதாஸ் என்பது தெரியவந்தது. குளித்தலை டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதத்தில் 3வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வெண்ணைமலையில் வரும் 20ஆம் தேதி 10 – 2 மணி வரை நடைபெறுகிறது. கடல்சார் வாரியத்தின் கீழ் செயல்படும் L & D கப்பல் நிறுவனத்திற்கு பயிற்சியுடன் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18-25 வயதுடைய பிட்டர்ஸ், வெல்டர் பங்கேற்கலாம்.
Sorry, no posts matched your criteria.