India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே முருளை காட்டுத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவர் நேற்று முன்தினம் தனது மனைவி ராணியுடன் காரில் வைரமடை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கரூர் அமராவதி மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின் பேரில் தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
பள்ளப்பட்டி குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி முனியராஜ் தலைமையிலான குழுவினர் நேற்று மாம்பழம் மற்றும் வாழைப்பழ குடோன்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சந்தைப்பேட்டை பகுதி பழக் குடோன்களில் மருந்து தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 40 கிலோ மாம்பழங்கள், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்து உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.
கரூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன், மனைவி அனுசுயா (84). இவருக்கு கடந்த 2 மாதங்களாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதில் பூரண குணமடையவில்லை என மனம் உடைந்து காணப்பட்டவர் நேற்று மதியம் வீட்டில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா தேவசிங்கம்பட்டியை சேர்ந்தவர் கருப்பன் மகன் நாகராஜன் (55) இவர் தனது வீட்டின் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி சீட்டு விற்ற நாகராஜன் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் புகழூரில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் அமைந்துள்ளது புகழிமலை. இதை ஆரம்பத்தில் ஆறு கிராமங்களுக்குச் சொந்தமாக இருந்ததால் இதை ‘ஆறு நாட்டார் மலை’ என்றும் அழைப்பதுண்டு. 315 படிகட்டுகள் கொண்ட இம்மலையின் மீது முருகன் கோவில் உள்ளது. இங்கு வேலாயுதனாக காட்சித் தருகிறார். இங்கு மலைக்காவல் அய்யநாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இதற்கும் மேல் சிறிய குகையில் சிவன் பார்வதி சன்னதி உள்ளது.
கர்நாடகா மாநிலம் தபுனகிரே மாவட்டம் உள்ளிக்கட்டையை சேர்ந்தவர் ராகுல் (30). இவர் திருச்சியில் பாலிஷ் போடும் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்வதற்காக ரயில் மூலம் அதிகாலை சென்றுள்ளார். அப்போது குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் அருகே மயக்கம் ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கரூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட காந்திகிராமத்தை அடுத்த திண்ணப்பா நகரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீ கருப்பண்ணசாமி சப்த கன்னிமார்கள் சுவாமி ஆலயத்தின் 12ஆம் ஆண்டு நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கி 05 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுவதையொட்டி திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இரவு 10 மணி வரை கரூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கரூர் தாந்தோன்றிமலை முருகன் கோவிலில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் கோடையை வெயிலிலிருந்து பொதுமக்களை தற்காத்துக் கொள்வதற்காக நீர் மோர் பந்தலை பேங்க் சுப்பிரமணி தலைமையில் திறந்து வைத்து வெள்ளரிக்காய், இளநீர், மோர் ஆகியவை வழங்கினார். உடன் மாவட்ட துணை தலைவர் சின்னையன், மாவட்ட செயலாளர் திருக்காம்புலியூர் சேகர், வட்டார தலைவர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் கரூர் மாவட்டத்தில், தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
Sorry, no posts matched your criteria.