India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று(மே 9) ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் அமராவதி ஆற்றின் மேம்பாலம் அடியில் மூன்று நாட்களான 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற பசுபதி பாளையம் போலீசார் அடையாளம் தெரியாத உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்தும், இறப்பிற்கான காரணம் குறித்தும் பசுபதிபாளையம் போலீசார் நேற்றுமுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பணிகளை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் காவிரி குடிநீர் வினியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காவிரியில் இருந்து சேமிக்கப்படும் குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யும் குடிநீர் தொட்டி வரை ஆய்வு செய்தனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உடன் இருந்தார்.
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கு கல்லுாரி கனவு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பேசிய ஆட்சியர், பிளஸ் 2 மாணவ- மாணவிகளுக்கு ‘கல்லுாரி கனவு’ என்ற நிகழ்ச்சி மே 13ல் கரூர் -கோவை சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறலாம் என்றார்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்றதால் வறட்சியின் கோர தாண்டவத்தால் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். காவிரி மற்றும் அமராவதி, நொய்யல், குடகனாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் கை கொடுக்காததால் இன்று கரூர் மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கரூர் காந்திகிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயலட்சுமி வித்யாலயா மாணவ, மாணவிகள் ஐசிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எஸ்.சௌமியா 500-க்கு 477 மதிப்பெண்களையும், கே.சௌமியா – 476, பி.ஹர்சிகா 470, தனிஷ்கா 469 மதிப்பெண்களும் பெற்றனர். இதில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. மேலும் பள்ளியின் முதல்வர் கார்த்திகா லட்சுமி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
கரூர் குளித்தலையில் உள்ள 65 ஆவது தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் கடம்பவனேசுவரர் கோயில் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 2ஆவது தலமான இதில் மூலவராக கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை உள்ளனர். புராணகாலத்தில் இவ்விடத்திற்கு குழித்தண்டலை என்ற பெயரும் உண்டு. இங்கு கடம்ப வனம் அதிகமிருந்ததாகவும் கூறுகின்றனர். இங்குள்ள முருகனுக்கு அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.
கடவூர் தாலுகா சின்னமநாயக்கன்பட்டி களம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரியா (14). இவர் வாழ்வார்மங்கலம் அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயப்பிரியா காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. ஜெயப்பிரியா தாயார் இளஞ்சியம் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் வெங்கமேடு அரசி நகர் அருகே திட்ட சாலையைச் சேர்ந்தவர் தங்கராஜ்(37). இவர் சின்னகுளத்து பாளையம் டீக்கடை அருகே காரை நிறுத்தி இருந்துள்ளார். அப்போது திடீரென காரின் கதவை தங்கராஜ் திறந்த போது அவ்வழியே பைக்கில் வந்த சிவபிரகாஷ் கதவில் மோதி படுகாயம் அடைந்தார். கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெங்கமேடு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று கரூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.