Karur

News December 30, 2024

கரூர் மாவட்டம் வழியாக சிறப்பு ரயில்

image

கர்நாடகா மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், டிசம்பர் 30, ஜனவரி 6, 13 மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3:20க்கு கன்னியாகுமரியை அடையும். சேலம், கரூர், நெல்லை வழியே இயக்கப்படும். மறுமார்க்க ரயில், வரும், 31, பிப்ரவரி 7, 14 ஆகிய நாட்கள் இரவு 7:10க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7:35 மணிக்கு ஹூப்பள்ளியை அடைகின்றது.

News December 30, 2024

ஆவின்பால் முகவர்: விண்ணப்பம் வரவேற்பு

image

கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கரூர் மாவட்டத்தில் ஆவின் பால் உபபொருட்கள் விநியோகம் செய்ய முகவராக கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம், புகழூர், அரவக்குறிச்சி, தோகைமலை, பரமத்தி, சின்னதாராபுரம், தென்னிலை பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சொந்த, வாடகை, கட்டிட இட வசதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 9585975281 எண்ணில் விபரம் தெரிந்து கொள்ளலாம்.

News December 30, 2024

கரூரில் அதிமுகவினர் 300 பேர் கூண்டோடு கைது

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அனுமதியை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்றது. அப்போது, 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைதுசெய்யப்பட்டனர். போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News December 30, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் அழைப்பு

image

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

கரூரில் புதுமைப்பெண் திட்டம் பணிகள் தொடக்கம்

image

தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம் நாளை (30.12.2024) காலை 10 மணிக்கு தான்தோன்றி மலை அரசு கலைக்கல்லூரியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மீ.தங்கவேல் தலைமையில் நடைபெற இருக்கின்றது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர் கலந்து கொண்டு பயன்பெறும் மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்க உள்ளார்கள்.

News December 29, 2024

‘யார் அந்த சார்?’ நோட்டீஸ் ஒட்டிய நபர் மீது வழக்கு பதிவு

image

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் மற்றும் பெரிய பாலம் பகுதியில் அரசு அனுமதி இன்றி ‘யார் அந்த சார்?’ என்ற வாசகங்கள் எழுதிய போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. அதனையடுத்து போஸ்டரை ஒட்டியதாக மணத்தட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் மீது குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 29, 2024

கரூரில் அதிமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், திமுக அரசை கண்டித்து கரூர் மாவட்ட அதிமுக.,சார்பில் டிச 27இல் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமான நிலையில், ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நாளை (டிச.30) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கட்சியினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

கரூர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி

image

ஸ்ரீ பாக்சிங் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி கரூரில் நடந்தது. கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைப்பாளர் விக்ரம் மனோகர் தலைமை வகித்தார். கரூர், அரவக்குறிச்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.

News December 29, 2024

கரூர் கலெக்டர் அறிவிப்பு

image

கரூரில் அறிஞர் அண்ணா நெடுந்தூரம் ஓட்டப் பந்தயம் போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் நபர்கள் 04.01.25 அன்று மாலை 5 மணிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், அலுவலகத்திலோ (அல்லது) 7401703493 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அறிவித்துள்ளார்.

News December 29, 2024

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்ட தீயணைப்பு வீரர்கள்

image

புன்னம் சத்திரம் அருகேயுள்ள மூலிமங்கலம் குருராகவேந்திர நகரைச் சேர்ந்த வசந்தி, இவரது வீட்டிற்குள் 5 அடி நீள நாகப்பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட வசந்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வீட்டுக்குள் இருந்த பாம்பை விரட்டியும், வெளியே வரவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து வீரர்கள் நேற்று வனப்பகுதியில் விட்டனர்.

error: Content is protected !!