India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட மக்களுக்கு 2025ஆம் ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2025 ஆங்கில புத்தாண்டு நாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைத்திருக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரூர் பாரதிதாசன் நகரில் பாரதியார் தமிழ்ச்சங்கம் உள்ளது. இங்கு திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா ஆண்டையொட்டி, குறளமுதம் நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் உமா செல்வன் தலைமை வகித்தார். இதில் வெள்ளியணை பள்ளி ஆசிரியர் மனோகர் உருவாக்கிய QR கோடு திருக்குறள் நூலை வெளியிட்டனர். 1330 திருக்குறள்களும் உரையுடன் QR கோடு வடிவில் உருவாக்கியுள்ளார். இதனால் செல்போனை பயன்படுத்தி 1330 திருக்குறள்களையும் உரையுடன் காணலாம்.
கரூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி (Mobile Phone Operated Automatic Pumpset Controller / Remote Motor Operator for Electric Pumpset) மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக 9443156424, 9443567583, 9443922630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி (Mobile Phone Operated Automatic Pumpset Controller / Remote Motor Operator for Electric Pumpset) மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக 9443156424, 9443567583, 9443922630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் கரூர் தலைமை தபால் நிலைய ஊழியர்களுக்கு காசநோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பது குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரூர் அருகே வேன் ஓட்டுநரான சிறுவன் பெரியகுளத்துப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து மாணவியின் தாய் கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிறுவனை போலீசார் நேற்று முன்தினம் (டிச.29) இரவு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K பெரோஸ் கான் அப்துல்லா, புத்தாண்டு நாளன்று இரவில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
➤ தவெகவில் மாற்றுக் கட்சியினர் 200 பேர் இணைவு ➤ க.பரமத்தி அருகே கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ➤ கரூரில் அதிமுகவினர் 300 பேர் கூண்டோடு கைது ➤ கரூரில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு ➤ வேலம்பாடியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு ➤ சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது ➤ பஞ்சபட்டி பகுதியில் மிதமான மழை ➤ மருதூர் பேரூராட்சியில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று (30.12.2024) மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் தி.சுவாதிஸ்ரீ, உதவி ஆணையர் (கலால்) திரு.கருணாகரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.