India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

கரூர்: தாந்தோணிமலை மஞ்சுநாதன் நகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி (45) என்பவர் தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற போதிலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம்(செப்.10) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு <

கரூர்: தமிழ்நாடு ஊராட்சி அலுவலகங்களில் கிளர்க், டிரைவர், அலுவலக உதவியாளர், வாட்ச் மேன் ஆகிய பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 7 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.19,500 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கரூர்: வேலாயுதம்பாளையம் தாலுக்கா பழனி முத்து நகர் அருகே உள்ள காவேரி ஆற்றுப்படுகையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். நஞ்சை புகலூர் கிராமம் விஏஓ ரவி புகாரில் வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று(செப்.11) வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மக்களே.., நமது மாவட்டத்தில் நாளை(செப்.13) ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். காலை 10:00 – 1:00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். உடனே SHARE!

▶️கரூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இப்பணிக்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, மற்றும் நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
▶️விண்ணப்பிக்க செப்.30ஆம் தேதியே கடைசி நாள்
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூர்: வேலாயுதம்பாளையம் பகுதியில் தனியார் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனம் மற்றும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த முதலீட்டில் இருந்து 150 முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ரூ.7 திருப்பி தராமல் ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 8 பேரை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட குழந்தைவேல், நல்லசிவம் ஆகியோர் மீது தற்போது குண்டாஸ் பாய்ந்தது.

கரூர்: பள்ளப்பட்டி பகுதியில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில், யாசர் அன்சாரி என்பவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை, வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஆடுகள் உயிரிழந்தன. இந்தத் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று (செப்.12) பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். லிங்கம்நாயக்கன்பட்டி பிக் பாஸ் மஹாலில், கீழவெளியூர் சமுதாயக்கூடத்தில், மணவாடி SKP மஹாலில் மற்றும் அத்திப்பாளையம் பகுதியில் திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.