India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் தோகைமலை அருகே குப்பைமேட்டுப்பட்டியை சேர்ந்த சீரங்காயி (40) உள்ளிட்டோர், டாட்டா ஏசி வாகனத்தில் கொசூர் குள்ளாயி அம்மன் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீரங்காயி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கடவூர் செம்பியாநத்தம் நாயக்கனூரை சேர்ந்தவர் முருகேசன்(34) ஏலச்சீட்டு நடத்தி 3 லட்சத்து, 30 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளார். கடந்த ஆகஸ்டில் சிந்தாமணிப்பட்டி போலீசார் முருகேசை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், எஸ்பி பரிந்துரையின்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் தங்கவேலு உத்தவிட்டார். இதையடுத்து முருகேசன் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் வரகூர் பகுதியை சேர்ந்த அபிமன்யுவின் மனைவி சுஷ்மிதா, நிறைமாத கர்ப்பிணியான இவர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆண் குழந்தை பெற்றார். பிறகு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அபிமன்யு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <

கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் ஏற்பாட்டில், (செப்டம்பர் 30) வரை ஒரு லட்சம் பசுமாடுகளுக்கு இலவச தோல் கழலை நோய்த் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம் ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்திற்கு மேற்பட்ட பசுக்களுக்கு இந்த தடுப்பூசி போடலாம் எனவும், விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே.., இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) Junior Executive பணிக்கு 976 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

கரூர்: கரூர் மக்களே.., தாட்கோ எனப்படும் தமிழ் நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் வாழ்வாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் மானியத்துடன் கடன் பெறுவதற்கு ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள இசேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதை உடனே SHARE பண்ணுங்க!

கரூர்: அரவக்குறிச்சி, தும்பிவாடியை சேர்ந்தவர் வசந்த் (25). இவர் நேற்று(செப்.12) தனது பைக்கில் தென்னிலை சாலையில் சென்ற போது, இவருக்கு முன்னால் அடையாளம் தெரியாத கண்டெய்னர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் மோதியதில் படுகாயமடைந்த வசந்த், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

▶️கரூர் மக்களே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலமே ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.