India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் கலெக்டர் தகவல்: படித்து முடித்து மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வேலையின்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இளைஞர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் கீழ் பயன்பெற குறிப்பிட்ட கல்வித் தகுதிகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ச்சியாக பதிவை புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதி உடையோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் இராசாண்டர் திருமலையில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில் காளை மாடு மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முறையான சோதனைகள் நடத்துவது குறித்து பொதுமக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.
மாவட்டத்தில் எதிர்வரும் திருவள்ளுவர் தினம் 15.1.2025 மற்றும் குடியரசு தினம் 26.1.2025 ஆகியாகி தினங்களில் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து மதுக்கூடங்கள் உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் மீறி மதுபான விற்பனை செய்யும் மேற்பார்வையாளர்கள் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மாவட்ட தலைவர் தங்கவேல் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .
கண் வலி கிழங்கு விவசாயிகளுக்கு அறிவிப்பு : கரூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட கரூர், குளித்தலை, இரும்பூதிபட்டி, சின்னத்தாராபுரம் ஆகிய நான்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கண் வலி கிழங்கு விதைகளை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகள் ஜன.21,22 ஆகிய நாட்களில் காலை 9.30 மணிக்கு தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் கூறியுள்ளார்.
கரூரில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாகும். இந்நிலையில், “பொங்கல் பரிசுத்தொகுப்பை அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக இன்று அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும்” என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை, 1 கரும்பு வழங்கப்படுகிறது.
2024 ல் மதுவிலக்கு, போதைப்பொருள், குற்ற சம்பவம், சட்டம் ஒழுங்கு, மணல் கடத்தல், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 45 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 519 பள்ளிகள், 45 கல்லூரிகள் என 1789 இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இத்தகவலை கரூர் எஸ்.பி பெரோஸ் கான் அப்துல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சிறப்பு சிறார் காவலர் என்ற 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு ரூ.18,536 முதல் ரூ.27,804 வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04324 296056 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
கரூர் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியாரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவிடம் திராவிட கழகம் சார்பில் புகார் மனு வழங்கப்பட்டது. உடன் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் குமாரசாமி, மாவட்டச் செயலாளர் காளிமுத்து, மாவட்டக் காப்பாளர் வே. ராஜு, மாநில இளைஞரணி துணை செயலாளர் ம. ஜெகநாதன், அலெக்ஸ் ஆகியோர் இருந்தனர்.
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எம்.கே.பாஸ்கர் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை சந்தித்தார். அப்போது ராமதாஸுக்கு தைப்பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்தார். உடன் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தமிழ்மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.