India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது
பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்கவும் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்கவும், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், தனக்கும் தனது சொத்துக்கும் பாதுகாப்பு வேண்டுமென கரூர் காவல்நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசியமங்கலம் 3 ரோடு அருகே குளித்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட 75 கிலோ புகையிலை பொருட்கள் கொண்டுவந்தது தெரியவந்தது. அதனையடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நரியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (33) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.
குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். அதிக வயிற்று வலியும், ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் மீது வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.
கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் லாலாபேட்டை மருதாண்டா வாய்க்கால் கரையில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் தனது மனைவியிடம் செல்போன் மூலம் தவறாக பேசியதை மனதில் வைத்துக் கொண்டு கத்தியால் ராஜலிங்கம் குத்தியுள்ளார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21ல் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் வேலை தேடுவோர் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள www. tnprivatejobs. tn. gov. in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324 223555 மற்றும் 97891 23085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுக்கா மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் மணிகண்டன் (21). இவர் தனது பைக்கில் குளித்தலை அருகே போத்தராவுத்தன்பட்டி சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து மணிகண்டன் அத்தை அழகம்மாள் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
கடவூர் ஒன்றியத்தில் உள்ள தரகம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாமை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். உடன் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுதகர் , கவுன்சிலர் பிரபாகர், ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 261 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர், 3 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தனித்துறை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், மாணவர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மஞ்சப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக பள்ளியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு செய்து, மஞ்சப்பை வழங்குவதை பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.