India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி இன்று இரவு 7 மணி வரை கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜோதிமணி, கரூர் மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களுடனான மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி ஆணையர் கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் முகமது பைசல், தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்
ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டனர். இன்றைய கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனை பட்டா, வேலைவாய்ப்பு, குடும்பத்தை கோருதல் ,மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம் 657 மனுக்கள் பெற்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் உயிரிழந்த நிலையில் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூன்.24) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி புகாரில் முன் ஜாமீன் கோரிய தீர்ப்பு நாளை வருவதாலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாலும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இன்று அதிகாலை பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பேருந்து முன் பக்கம் நின்று பழுது பார்த்துக் கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால், மதுரை உள்பட 20 மாவட்டங்களில் இன்று (ஜூன்.23) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் பகுதிகளுக்காக ரூ.800 கோடியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(ஜூன்.22) சட்டப்பேரவையில் அறிவித்தார். இதனால், கரூர் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை ஒன்றியங்களின் 64 குடியிருப்புகளுக்கும் இந்த குடிநீர் திட்டத்தால் மொத்தம் 4.85 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனக் கூறியுள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்டில் கோவை சாலை, வெங்கடேஷ்வரா சாலையில் இருந்த, 29 கடைகள் இடிக்கப்பட்டன. தற்போது, அதே இடத்தில் கடைகளை கட்டி, பழைய உரிமம் தாரர்களுக்கு விட, கரூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 29 கடைகளின் பழைய உரிமம்தாரர்கள் செலுத்த வேண்டிய நிலுவை வாடகை குறித்த விபரங்களை பிளக்ஸ் பேனரில் கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே வைத்து மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருநங்கைகள், திரு நம்பிகளுக்கு அடையாள அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பாக நடைபெற்றது. இதில், 36 திருநங்கைகள் வீட்டுமனை பட்டா மற்றும் சுய தொழிலுக்கான கடன் உதவி, வீடுகளே பராமரிக்க உதவி ஆகியவை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.