India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே..அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிப்பட்டி, பணிக்கம்பட்டி, கொசூர், ஆகிய துணை மின்நிலைய உட்பட்ட பகுதிகளில் நாளை (செப்-23) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என குளித்தலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். மக்கள் முன் கூட்டியே திட்டமிடுங்கள். SHARE பண்ணுங்க மக்களே!

தான்தோன்றிமலை சத்திய மூர்த்தி நகரை சேர்ந்த காண்டீபன் (52) என்பவர் டாஸ்மாக் கடையில் 500 ரூபாயை கொடுத்து மது கேட்டு போது கடை மேற்பார்வையாளர் வேணு விஜய் கள்ள நோட்டு என அறிந்து, தான்தோன்றிமலை போலீசில் புகாரளித்து விசாரணையில், காண்டீபனிடமிருந்து ரூ.10,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, இது சம்பந்தமாக 5 பேரை சென்னையில் கைது செய்து கள்ள நோட்டு மிஷினையும் நேற்று பறிமுதல் செய்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22.09.2025) மாலை 4 மணிக்கு எரிவாயு தொடர்பான பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் எண்ணெய் நிறுவன முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்துக் கொண்டு தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. SSLC முடித்திருந்தால் போதும், மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <

கரூர் மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழிற்பயிற்சியை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டமும், தென்மண்டலத் தொழில் பழகுநர் பயிற்சி வாரியமும் இணைந்து நடத்துகின்றன. மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பட்டதாரிகள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அக்.18-க்குள் https://nats.education.gov.in/ இணையத்தில் பதியவேண்டும்.

கரூர் மாவட்டம், கரூர், மதுரை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் இன்று ( 21. 09. 2025 ) அமைச்சர் நாயனார் நாகேந்திரன் ஆலோசனைப்படி, கரூர் பாஜக தலைவர் வி வி செந்தில்நாதன் அவர்கள் கீழ்க்கண்ட பொறுப்புகளை பாஜக நிர்வாகிகளுக்கு அளித்துள்ளார். கிருஷ்ணராபுரம் பெருமாள் இளைஞர் அணி, கரூர் மேற்கு ஒன்றியம் பிரியா ஈஸ்வரன் மகளிர் அணி, கா பரமத்தி வடக்கு ஒன்றியம் தங்கதுரை பட்டியல் அணி பொறுப்பு வழங்கள்

சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பின்படி, கரூர்-ஈரோடு ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண்: 56809) செப். 22, 25, 28, 30 ஆகிய 4 நாட்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 7.20 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில், கரூர் ரயில் சந்திப்புடன் நிறுத்தப்படும். அங்கிருந்து ஈரோடு நோக்கிச் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் அண்ணாநகர் சீத்தக்காடு பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, சின்னதாராபுரம் போலீசார் ஜெகன் 31, ரஞ்சித்குமார் 29, கார்த்திகேயன் 42, சந்தானம் 40, ஆறுமுகம் 42, அரவிந்த் கார்த்திக் 23 ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.1230 பறிமுதல் செய்தனர்.

கரூர் மக்களே, மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள விடுதி காப்பாளர், கணக்காளர் உள்ளிட்ட 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப +2 முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். இதற்கு செப்.23ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.