Karur

News September 26, 2025

கரூரில் மாரத்தான் போட்டி!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் மூலம் கரூர் மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான போட்டியாக அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியானது ஆண், பெண் இரு பிரிவினருக்கும்
செப்டம்பர் 28 ஆம் தேதி கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கி அதே இடத்தில் முடியும். இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை(செப்.27) மாலை 5 மணிக்குள் பதிவு செய்தல் வேண்டும்.

News September 26, 2025

கரூரில் தெரிய வேண்டிய முக்கியமான உதவி எண்

image

கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா அறிவுறுத்தலின்படி கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக முதியோர் உதவி எண் 14567 வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் வாழும் முதியோர்கள் எந்தவித பிரச்சனை இருந்தாலும் கவலை கொள்ளாமல் இந்த எண்ணிற்கு அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

கரூர்: பால் பண்ணை தொடங்க மானியம் பெறுவது எப்படி?

image

1) கரூர் மக்களே.., மத்திய அரசின் DEDS திட்டத்தின் மூலம் பால் பண்ணை தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.
2)பால் பண்ணை, பால் கடை, பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, கால்நடைகள் உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படும்.
3)கடனை திரும்பச் செலுத்த 6 மாதம் – 3 ஆண்டுகள் வரை சலுகை காலம் சில இடங்களில் உண்டு.
4) இதற்கு விண்ணப்பிக்க நபார்டு வங்கி, கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகளை அணுகவும். (SHARE)

News September 26, 2025

கரூர்: கொட்டிக்கிடக்கும் வங்கி வேலைகள்!

image

கரூர் மக்களே…, உங்களுக்கான வங்கி வேலை வாய்ப்புகள்:
1)இந்தியன் வங்கி வேலை: https://indianbank.bank.in/career/
2)இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலை: https://ibpsonline.ibps.in/iobjul25/
3) SBI வங்கியில் வேலை: https://sbi.bank.in/web/careers/current-openings
4) கனரா வங்கி வேலை: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSco5TvC92XJfhxRFxKMbIG-vY62qm-fgi81mdCML8SfgGBbFA/viewform (SHARE IT)

News September 26, 2025

கரூர்: கனரா வங்கியில் வேலை வேண்டுமா?

image

கரூர் மக்களே.., உங்கள் ஊர் கனரா வங்கியில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு முழுவதும் சுமார் 394 அப்பரெண்டிஸ் பதவிகளின் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. அடிப்படை சம்பளமாக மாதம் ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 26, 2025

கரூரில் விஜய் என்ன பேசுவார்?

image

கரூருக்கு நாளை(செப்.27) வருகை தரும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் எதைப் பற்றி பேசலாம் எனக் கீழ் வருமாறு:
1)முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்த விமர்சனம்.
2)கரூர் முருங்கை உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள், முதலீட்டுகளை மேம்படுத்துவது
3)மினி டைட்டில் பார்க்கை விரைவில் அமைப்பது
4) குடிநீர் தட்டுப்பாட்டுப் பிரச்னை
5)கரூர் ஜவுளி உற்பத்தி வளர்ச்சி
வேறு எதை பற்றி பேசலாம்? என COMMENT பண்ணுங்க!

News September 25, 2025

கரூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள இளம் சாதனையாளர்கள் “பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைதிட்டத்தின் கீழ் (PM-YASASVI – Top Class Education in Schools for OBC, EBC & DNT Students)” மூலம் பயனடையலாம். மேலும் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் (<>https://scholarships.gov.in<<>>) விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News September 25, 2025

கரூர் வருகிறார் தவெக ‘புஸ்ஸி’ ஆனந்த்!

image

தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காக வருகிற செப்.27ஆம் தேதி அன்று கரூர் வருகை தரும் நிலையில், விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கக்கூடிய இடத்தை பார்க்கவும், அந்த இடத்திற்கு உரிய அனுமதி பெறவும் இன்று(செப்.25) மாலை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் ‘புஸ்ஸி’ ஆனந்த் கரூர் வருகை தர உள்ளார்.

News September 25, 2025

தவெக விஜய் கரூர் வருகை உறுதி!

image

கரூர்: வருகிற செப்.27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் வருகை புரிய உள்ளதாக தவெக சார்பில் செய்தி வெளியானது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதற்கு அனுமதி மறுத்தார். இந்நிலையில், நேற்று(செப்.24) கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் அனுமதி கடிதம் வழங்கியதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

News September 25, 2025

கரூர்: அன்புமணியிடம் பேசிய விஜய்!

image

வரும் 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அன்புமணி நடைபயணம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே நாளில் த.வெ.க தலைவர் விஜய் கருர் ,நாமக்கல் த.வெ.க தலைவர் விஜய் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் த.வெ.க தலைவர் விஜய் வேண்டுகோளை ஏற்று வரும் செப்.28.ம் தேதிக்கு அன்புமணி மாற்றியுள்ளார்.

error: Content is protected !!