Karur

News February 20, 2025

அடையாளம் தெரிய வாகனம் மோதி மூதாட்டி பலி

image

அரவக்குறிச்சி கொடையூர் கிராமம் ஐந்து ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மலர்க்கொடி (67). கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் மலர்க்கொடி நேற்று ஐந்து ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வடக்கு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் மலர்க்கொடி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் . அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 19, 2025

கரூரில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு

image

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலை வாய்ப்பு கரூரில் (22/02/2025) அன்று பழைய அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கான வயதுவரம்பு 19 முதல் 30 வரை இருக்க வேண்டும். மருத்துவ உதவியாளர் பணிக்கான தகுதி பிஎஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி படித்திருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 7397724819 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

News February 19, 2025

கரூர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவர் மீது வழக்கு

image

க.பரமத்தி திருக்காடுதுறை பகுதி லோகநாதன் (35). அதே பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்‌ . திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். பெண் அளித்த புகாரின் பேரில் லோகநாதன் அவரது தாயார் 2 பேர் மீது கரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News February 19, 2025

32 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

image

கரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பெரம்பலூருக்கும், கரூர் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் இசைவாணி திருச்சிக்கும், குட்கா வியாபாரிகள் தொடர்பு வெங்கமேடு இன்ஸ்பெக்டர் மாயனூருக்கும், நகை காணாமல் போன வழக்கில் இளம் பெண்ணிடம் புகைப்படம் அனுப்ப சொல்லி வாட்ஸ் அப்பில் பேசிய வெங்கமேடு இன்ஸ்பெக்டர் அறந்தாங்கிக்கும் மாற்றப்பட்டனர். இதுபோல் 32 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News February 19, 2025

கரூரில் நாளை மறுநாள் 200 பேருக்கு வேலை காத்திருக்கு

image

கரூர் வெண்ணைமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 21ம் தேதி காலை 10 – 2 வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 25க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். கூடுதல் விவரங்களுக்கு 94990 55912 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 19, 2025

18 லட்சம் பரிசு: மஞ்சப்பை விருது பெற கலெக்டர் அழைப்பு

image

கரூர் கலெக்டர் தங்கவேல் அறிக்கை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் மாற்றாக பொருட்களை பயன்படுத்த பங்களிப்பு செய்த பள்ளி கல்லூரி வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது. 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 18 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும். இதன் விண்ணப்பத்தை கலெக்டர் அலுவலக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2025

கரூர் எம்பி ஜோதிமணி வேதனை!

image

கோவையில் 17 வயது சிறுமி 7 கல்லூரி மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் கைது செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வேதனையும், கவலையும் தருகின்றன. எந்தவொரு தொழில்நுட்பமும் முற்போக்கானதாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக எப்படி பயன்படுத்துவது என்பதை வக்கிரம் மிகுந்த கூட்டம் கண்டறிந்து விடுகிறது என வேதனை தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

நகை கடன் பெற்ற விவசாயிகள் சிக்கல்? 

image

ஆர்பிஐ உத்தரவின்படி அனைத்து வங்கிகளிலும் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் முழு தொகையுடன் பணத்தை கட்டி தான் நகையை மாற்றி வைக்க முடியும். இந்த நடவடிக்கையால் விவசாயிகள், ஏழை குடும்பத்தினர் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் தனியார் வங்கிகள் இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணம் வழங்கி நகையை தனியார் வங்கிகளுக்கு மாற்ற வழிவகை செய்து வருவதால், அரசு வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

News February 18, 2025

மாவட்ட சுகாதாரத் துறையில் 276 காலியிடங்கள்

image

காரப்பேட்டையில் உள்ள அரசு புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 276 காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8th, Any Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு இந்த <>லிங்கை<<>> க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News February 17, 2025

கரூரில் நல திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்து, பிறகு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

error: Content is protected !!