India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், காக்காயம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பவல்லி 35. இவரது மகள் ஹேமலதா (19) உடன் நேற்று இருசக்கர மோட்டார் வாகனத்தில் பஞ்சப்பட்டி சாலையில் சென்றபோது காரில் வந்த அவரது கணவர் கோகுல்நாத் மற்றும் நண்பர்களான முத்துக்குமார், கமல், ராஜேஷ் ஆகிய 4 பேர் ஹேமலதாவை கடத்தி சென்றதாக புஷ்பவல்லி புகாரில் நான்கு பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களையும், சிகிச்சை பெறுபவர்களையும் அகில இந்தியப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எம்.பி. இன்று (அக்டோபர் 01) சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. மற்றும் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

கரூர் எம்எல்ஏ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தார். விஜய் பிரச்சார கூட்டத்தில் நடந்த துயர சம்பவத்தில், தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டது. 41 பேர் பலியான விவகாரத்தில், பிரச்சார கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் 4 மணிக்கு வந்திருந்ததால், கூட இந்த துயர சம்பவம் நடந்திருக்காது. கூட்டத்தை பொறுத்து இடத்தை தேர்வு செய்வது அந்த கட்சிகளின் பணி என செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,வரும் அக். 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களில் கரூர் மாவட்டத்தில் உள்ள முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார். ஏற்கனவே, இந்தத் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள 28,694 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கல்வி கற்கும் மாணவ மாணவிகள், குறிப்பாகப் பெண் பிள்ளைகள், அந்நிய ஆண்களிடம் இருந்து தங்களுக்கு ஏற்படும் தவறான தொடுதல்கள் மற்றும் பாலியல் கொடுமைகள் பற்றித் தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கட்டாயமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கரூர் எஸ்.பி. ஜோஸ் தங்கையா வலியுறுத்தியுள்ளார். அவசர உதவிக்கு 1098,100 ஆகிய எண்களுக்கு அழைக்கவும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள்<

கரூர் மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். இங்கு<

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து பார்வைகளும் நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. இவைகள், முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்., 5, 6 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில், 730 ரேஷன் கடைகளை சேர்ந்த, 28,694 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.