India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுருதீஸ்வரன் (23). இவர் நேற்று தனது சரக்கு வாகனத்தில் மலைக்கோவிலூர் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எந்த சிக்னலும் இல்லாமல் சரவணன் நிறுத்தி வைத்திருந்த ஈச்சர் வேன் பின்னால் மோதியதில் சுருதீஸ்வரன் படுகாயம் அடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு – கரூர் தடத்தில் உள்ள பல்வேறு பாலங்களில் பொறியியல் பணி நடக்க உள்ளது. இதனால் அக்., 3, 9 ஆகிய நாட்களில் காலை, 7:20க்கு புறப்படும், திருச்சி – ஈரோடு பயணியர் ரயில், கரூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் மதியம், 2:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், மதியம், 3:05க்கு கரூரில் இருந்து கிளம்பும். இரு மார்க்க ரயில்களிலும் ஈரோடு முதல் கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது.

1.அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
2. இதற்கு அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
3. ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் மூலம் உங்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படும்.
4.<

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்

கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூர் அருகில் கட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தற்பொழுது புதிய பேருந்து நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு வருகின்ற அக்டோபர் (6-10-2025) திங்கட்கிழமை முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கரூரில் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அக்டோபர் 5, 6 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமைப்பொருட்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பயனாளர்கள் மேற்கண்ட தேதிகளில், குடிமைப்பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூரில் காந்திஜெயந்தியை முன்னிட்டு நாளை (02.10.2025) காலை 10 மணியளவில் தாந்தோணி மலை கதர் அங்காடியில் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின் சிறப்பு விற்பனை துவக்கி வைத்து, மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி 10.15 மணியளவில் திருமுருகன் மஹாலில் (சுங்க கேட் அருகில்) ரிப்பன் வெட்டி கரூர் மாவட்ட ஆட்சி தலைவர் தங்கவேல் துவக்கி வைக்க உள்ளார்.

கரூர் மக்களே..தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் (TANGEDCO) – கள உதவியாளர் வேலைவாய்ப்பு!
கரூர் மாவட்டம் மற்றும் மற்ற பகுதிகளுக்கேற்ப பணியிடங்கள்
1)மொத்த காலியிடங்கள்: 1,794
2)கல்வித்தகுதி: ITI (ஏதேனும் துறையில்)
3)சம்பளம்: ரூ.18,800 – ரூ.59,900 வரை
4)விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி: 02-10-2025
5)விண்ணப்பிக்கவும், முழு விவரங்களை தெரிந்துகொள்ளவும் இங்கே <

கரூர் மாவட்ட தோட்டக்கலை பயிர் செய்திருக்கும் விவசாயிகள், வடகிழக்கு பருவ மழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, கரூர் கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்; பல்லாண்டு பயிர்களான மா, பலா, கொய்யா, தென்னை, பாக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும், மரங்களின் எடையை குறைக்கும் வகையில், கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.

கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி எம்எல்ஏ, திமுக தளபதி கூட்ட அரங்கில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். கரூர் துயர சம்பவத்தின்போது உடனிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Sorry, no posts matched your criteria.