Karur

News January 27, 2025

கரூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் நாளை (ஜன.28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பின்வரும் மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:
1) நச்சலூர் துணை மின் நிலையம்
2) வல்லம் துணை மின் நிலையம்
3) பணிக்கம்பட்டி துணை மின் நிலையம்
4) பாலவிடுதி துணை மின் நிலையம்.
மக்களே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 27, 2025

கரூர் மக்களே இன்றும், நாளையும் நிறுத்தம்

image

குளித்தலை அடுத்த அய்யர்மலையில் ரெத்தின கிரீஸ்வரர் கோவில் உள்ளது. 1017 செங்குத்தான படிகளைக் கொண்ட இக்கோவிலில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, பொதுமக்கள் பக்களிப்பு தொகையுடன் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த அய்யர் மலை, ரோப் கார் மாதாந்திர பணிக்காக இன்றும், நாளையும் செயல்படாது என கோவில் அலுவலர் தங்கராஜீ கூறினர். பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

News January 26, 2025

நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

image

சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாளை (ஜன.27) கரூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் லோட்டஸ் கண் மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள் செங்குந்தபுரம் லோட்டஸ் மருத்துவமனையில் காலை 10 மணி முதல் இலவசமாக கண்ணன் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 26, 2025

கரூர் கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

image

கரூர் மாவட்டம் தாந்தோணி கிழக்கு ஒன்றியம் காக்காவாடி ஊராட்சியில் உள்ள மன்ற அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News January 26, 2025

சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

image

கரூர் மாவட்டத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய துணைப்பதிவாளர் பிச்சைவேலு, கூட்டுறவு சார்பதிவாளர் ஆசைத்தம்பி, கனிமொழி மற்றும் சதீஸ்குமார் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட எஸ் பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 26, 2025

கரூரில் இளம் வல்லுனர் விண்ணப்பிக்கலாம்

image

கரூர் மாவட்ட திட்ட செயலாக்கம் சார்பில இளம் வல்லுனர் பணிக்கு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கலை பொறியியல், புள்ளியில் அதற்கு இணையான பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும். மாதம் மதிப்பூதியமாக ரூ.50000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9445458080, 04324256504 அழைக்கலாம்.

News January 26, 2025

ஜூடோ போட்டியில் ஏழு தங்க பதக்கம் வென்று சாதனை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் (21.01.25 முதல் 25.01.25 )வரை பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜூடோ போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட கேலோ இந்தியா ஜூடோ பயிற்சி மைய ( KARUR DISTRICT KHELO INDIA JUDO TRAINING CENTRE ) வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டும் மொத்தம் 7 தங்க பதக்கம், 5 வெண்கலம் பதக்கம் வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

News January 25, 2025

கரூர் மக்களே! உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுங்கள்

image

நாளை (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு உங்கள் ஊரில் கிராம சபைக் கூட்டங்கள் மற்றும் அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் குடியரசு தின விழா கொடியேற்ற நிகழ்ச்சிகளும், நடைபெற உள்ளன. இந்த நிகழ்வுகளை வே2நியூஸில் பதிவிட்டு, உங்கள் ஊர் செய்திகளை அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். எப்படி அனுப்புவது என்று தெரியலையா? இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.

News January 25, 2025

மின்கம்பத்தில் நிலை தடுமாறி எலக்ட்ரீசியன் பலி

image

குளித்தலை அருகே வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (50). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகின்றார். இன்று மாலை நாவல் நாயக்கன்பட்டி கிராமத்தில் மின்தடை ஏற்பட்டதாக அங்கிருந்த மின் கம்பத்தில் ஏரி பழுது பார்த்துள்ளார். எதிர்பாராத விதமாக கம்பத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த ரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பலியானார். தோகைமலை போலீசார் விசாரணைமேற்கொண்டனர்.

News January 25, 2025

தேசிய அளவில் கரூர் பள்ளி மாணவி தேர்வு

image

தேசிய அளவில் நடந்த வீர் கதா 4.0 போட்டியில் கரூர் மாவட்டம் குளித்தலை செயின்ட் டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி சத்யஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீர தீர செயல்களுக்கான கேலன்ட்ரி விருது பெற்ற மேஜர் சரவணன் பற்றிய கட்டுரை எழுதி தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். குடியரசு தின விழா அணி வகுப்பில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

error: Content is protected !!